பிப்.13 அன்று திமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து? ஸ்டாலினை சந்திக்கிறார் கார்கே!
சென்னை: பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
இதனால் அன்றைய தினமே நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை திமுக வழங்கியது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, என 9 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கேட்டு வருகிறது.
15 தொகுதிகள் வரை திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில், 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம், ஆகிய 12 தொகுதிகள் மற்றும் ஏற்கனவே போட்டியிட்ட 9 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளில் 15 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது.
திமுகவோ 7 சீட்டுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் இனியும் நாங்கள் பேசினால் வேலைக்கு ஆகாது என தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து மல்லிகார்ஜுனே கார்கேவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து வரும் 13ஆம் தேதி சென்னை வரும் மல்லிகார்ஜுனே கார்கே முதலமைச்சர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசுகிறார். மேலும் அன்றைய தினமே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஃபைனல் செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக கூட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இருந்த போது குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், போன்றோர் திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு சென்னை வருவார்கள். இப்போது காங்கிரஸ் தலைவராக உள்ள கார்கேவே நேரடியாக சென்னை வந்து திமுக தலைமையை சந்திக்கிறார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications