சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமல்லபுரம் போறீங்களா.. அப்ப இது உங்களுக்குத்தான்.. படிச்சிட்டு போங்க!

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை இன்றைய தினம் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களையும் அவர்களின் சாதனைகளையும் தியாகங்களையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசும் தனியார் அமைப்புகளும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

Mamallapuram Archeological monuments will be visited at free of cost today

இந்த நிலையில் தமிழகத்தின் மிக முக்கியமானதும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் இன்று பெண்கள் தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

பெண்மையை மதித்து கொண்டாடுவோம்...ஆளுநர்,முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து பெண்மையை மதித்து கொண்டாடுவோம்...ஆளுநர்,முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து

அதன்படி வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாக கண்டு களிக்கலாம். பொதுவாக இவற்றை பார்வையிட உள்நாட்டு பயணிகளுக்கு ரூ 40-ம் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ 600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல் கடற்கரை கோயிலை பார்ப்பதற்கும் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் தொல்லியல் துறை வழங்கவில்லை.

English summary
Mamallapuram Archeological monuments will be visited at free of cost today ahead of Women's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X