பூரித்த மேல்மருவத்தூர்.. பங்காரு அடிகளாரை மாமல்லபுரத்தில் பார்த்தீங்களா? செவ்வாடை சித்தரால் பரவசம்
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.. இதையடுத்து, மேல்மருவத்தூர் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், பூரிப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
கடந்த 1977-ல் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியதுடன், கோயில் கருவறைக்கே சென்று நேரடியாக பெண்கள் சென்று வழிபடலாம் என்ற புதிய நடைமுறையையும் ஏற்படுத்தியவர் செவ்வாடை சித்தர் என்று பக்தர்களால் அன்போடு போற்றப்படும் "பங்காரு அடிகளார்"

மாதவிடாய்: மாதவிடாய் நாட்களிலும் தடையின்றி வழிபடலாம் என்று பங்காரு அடிகளார் அன்று அறிவித்திருந்தது, தமிழக பெண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தேசம் முழுவதுமே இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. பங்காரு அடிகளாரின் இந்த ஆன்மீகப் புரட்சி அறிவிப்பை பலரும் மதித்து போற்றினார்கள்.
சிவப்பு நிற ஆடை அணிந்து, சன்னியாசியாக, எளிமையான தோற்றத்துடன் பலரின் குறைகளையும், கஷ்டங்களையும், நோய்களையும் தீர்த்து வைக்க துவங்கியதால், மேல் மருவத்தூர் கோயிலுக்கு பெண்களின் வருகை கட்டுக்கடங்காமல் பெருகியது. சபரிமலைக்கு பெண்கள் இருமுடி கட்டி செல்வதை போலவே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குள்ளும் பெண்கள், ஆண்கள் என பலரும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி எடுத்து வந்து வழிபடும் முறையானது, மற்றொரு ஆன்மீக புரட்சியாகவே கருதப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்: ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களையும் துவங்கியதுடன், இந்த அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்தார் பங்காரு அடிகளார். பொதுமக்களின் நெருக்கமாகவே பயணித்ததால், "அம்மா" என்றே அழைக்கப்பட்டார்.
சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில், மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெறுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பால், தன்னுடைய 82 வயதில் காலமானார் பங்காரு அடிகளார். இதையடுத்து, மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள "ஆர்ட் ஸ்டுடியோ" என்ற சிற்பக்கூடத்தில், பங்காரு அடிகளாரின் கற்சிலை ஒன்று தயாரானது.
கருங்கல்: கிட்டத்தட்ட 450 கிலோ எடை கொண்ட கருங்கல்லில், 4 அடி உயரம், 2 அடி அகலத்தில், பங்களாரு அடிகளார் உட்கார்ந்திருப்பதை போல தத்ரூபமாக செதுக்கப்பட்டது. சிற்பி முருகன் என்பவர் 3 மாதங்களாக செதுக்கி வந்த இந்த சிலையை கடந்த மாதம் நேரில் பார்க்க சென்று பார்வையிட்டார் பங்காரு அடிகளாரின் மனைவியும், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியுமான லட்சுமி அம்மாள்..
சிலையை பார்த்ததுமே ஒரு கணம் வியப்பில் ஆழ்ந்துவிட்டார்.. அசப்பில் பங்காரு அடிகளார் போலவே சிலை வடிவமைக்கப்பட்டிருந்ததை கண்டு கண்ணீர் விட்டு அழுதே விட்டார். பங்காரு அடிகளார் எப்போதுமே செவ்வாடையை உடுத்தியிருப்பது போலவே, கற்சிலையிலேயே செவ்வாடை உடுத்தி செதுக்கப்பட்டிருக்கிறது.
சிலை வழிபாடு: இந்த சிலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வைத்து, வழிபாடு செய்ய போவதாக அப்போதே செய்திகள் வெளியாகியிருந்தன.. எனவே, பங்காரு அடிகளார் சிலையை காண, பக்தர்களும் ஆர்வமாய் காத்திருந்தனர்.
இந்நிலையில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில், பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த 16ம் தேதி குருபீடத்தில் துவங்கியது... கருவறையில், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டிருந்தன. நேற்றைய தினம் குரு பீடத்தில் பங்காரு அடிகளார் திருவுருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, லட்சுமி பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டி வழிபட்டார். கருவறையில் ஏற்றப்பட்ட அருள்ஞான தீபம், சித்தர்பீடம் முழுதும் வலம் வந்து, ஓம்சக்தி மேடை முன்பு, பக்தர்களின் வழிபாட்டிற்காக பொருத்தப்பட்டது.
செவ்வாடை பக்தர்கள்: இதையடுத்து, ஆதிபராசக்தி அம்மன் கருவறை, குரு பீடத்தின் முன், யாககுண்டங்கள் அமைத்து, முதல் கால வேள்வி பூஜையும் நேற்று காலையில் நடைபெற்றது..
இந்த விழாவில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. பங்காரு அடிகளார் சிலை கண்டதுமே பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினர். இன்றைய தினம் 2ம் கால வேள்வி பூஜையும், குடமுழுக்கு என பங்காரு அடிகளார் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து கொண்டிருப்பதால், மேல்மருவத்தூர் பரவசத்துடன் காணப்படுகிறது.
நிகழ்வுகள்: பங்காரு அடிகளார் மறைந்து ஒரு வருடம் முடிய உள்ள நிலையில், முன்னதாக, 2 நாட்களுக்கு முன்பு, கோவிலில் உள்ள ஓம் மேடையில் விளக்கு பூஜையும் நடந்தது.. நேற்று 17ம் தேதி கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 18ம் தேதி காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வேள்வி நடந்தது.. நாளை அக்டோபர் 19ம் தேதி காலை மணிக்கு முடமுழுக்கு மற்றும் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க போவது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications