வடிவேலு காமெடி சீன் மாதிரி! சென்னையில் பரிதாபப்பட்ட நபருக்கு பட்டை அடித்த ஓசூர் வாலிபர்
சென்னை: சென்னை: சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்த தனியார் நிறுவன மேலாளர், இரக்கப்பட்டு ஒருவருக்க்கு தங்குவதற்காக இடம் கொடுததது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தூங்கி முழிப்பதற்குள் ரூ.1.30 லட்சம் செல்போனை இழந்துள்ளார். விசா வாங்குவதற்காக சென்னை வந்த அவருக்கு லாட்ஜில் ரூம் எடுத்து தங்க வேண்டிய நிலை வந்துள்ளது. இதையடுத்து சென்னை கேகே நகரில் லாட்ஜில் தனியாக இருக்கும் போது, இளைஞர் ஒருவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துள்ளார்.
சமீப நாட்களாக அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பணம் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இது போன்ற மோசடி வலைகளில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள். எனினும் இந்த மோசடியில் ஒருசிலர் சிக்கி வரும் சூழல் அரங்கேறி வருகிறது. அப்படித்தான் விசா வாங்குவதற்காக சென்னை வந்த நபரிடம் ஓசூர் வாலிபர் ஒருவர் மோசடி செய்துள்ளார். ஆனால், இந்த மோசடி கொஞ்சம் வித்தியாசமாக நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

தங்க இடம் வேண்டும் என உதவி
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3- ம் தேதி சென்னை வந்து, கே.கே.நகர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். இரவு உணவு சாப்பிட்டு விட்டு, தங்கும் விடுதிக்கு நடந்து சென்ற போது, வழியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், திருவாரூர் நபரிடம் தன் பெயர் நஞ்சுண்ட கவுடா என்று கூறி அறிமுகம் ஆனார்.
தனது உடைமைகள் அனைத்தும் தொலைந்து விட்டதாகவும், தங்குவதற்கு இடம் வேண்டும் எனவும் பரிதாபமாக அந்த நபர் உதவி கேட்டார். இதை கேட்டு இரக்கப்பட்ட நூரில் அமீன், நஞ்சுண்ட கவுடாவை, அவரது அறையில் தங்குவதற்கு அனுமதித்து இடம் கொடுத்தார்.
இரக்கப்பட்டவருக்கு நேர்ந்த கதி
அறையில் திருவாரூர் நபர் படுத்து தூங்கிவிட்டார். அவரோடு, நஞ்சுண்ட கவுடாவும் படுத்து தூங்கினார். நள்ளிரவில் கண் விழித்து எழுந்து பார்த்தபோதுதான், ஏமாற்றப்பட்ட விஷயம் தெரிந்தது. இரக்கப்பட்டு தங்க இடம் கொடுத்தது தப்பா போச்சே என நினைக்கும் அளவிலான சம்பவத்தை நஞ்சுண்ட கவுடா செய்து இருக்கிறார்.
அதாவது, தன்னோடு நஞ்சுண்ட கவுடா என்ற பெயரில் தூங்கிய நபரை காணவில்லை என திருவாரூர் நபர் தேடிய போதுதான் தன்னிடம் இருந்த ரூ.500 ரொக்க பணம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பிலான சவுதி அரேபிய ரியால் பணம், 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இரக்கப்பட்டு தூங்குவதற்கு இடம் கொடுத்தவரின் பொருட்களை அந்த நஞ்சுண்ட கவுடா அபகரித்து சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த, திருவாரூர் நபர், கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், தங்க இடம் கேட்டு, உதவி செய்தவரின் உடைமைகளை திருடி தப்பிய நஞ்சுண்ட கவுடா (வயது 25) கர்நாடக மாநிலம், ஓசூர் தும்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
பணத்தை செலவு செய்துவிட்டார்
தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். திருடிய பணத்தை அவர் செலவு செய்துவிட்டார்.
செல்போன்களையும் விற்றுவிட்டது தெரியவந்தது. முன் பின்தெரியாதவர்களை தங்கியிருக்கும் அறை வரை அழைத்து சென்றால் இப்படித்தான் நடக்கும் எனவும், தெரியாத நபர்களை எளிதில் நம்பி விடக்கூடாது என்றும் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். வடிவேலு சில படங்களில் இது போன்று முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்தால் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இணங்கள் பல காமெடி சீன்களில் நடித்து இருப்பார்.
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications