டாக்டர் மாணவியை உறவுக்கு அழைத்த காமுகன்.. விசாரணையில் பகீர் தகவல்கள்.. சென்னையில்!
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: தந்தை நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்களும் வெளியாகி உள்ளன.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு தொழிலதிபர். இவரது சர்ச் நண்பர் வின்சென்ட். சாமுவேலுக்கு 35 வயதில் ஜோஸ் என்ற மகனும், வின்சென்ட்டுக்கு 20 வயதில் பல் மருத்துவம் படிக்கும் மகளும் உள்ளனர்.
ஜோஸ் திருமணம் ஆனவர், 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தாலும், வின்சென்ட் மகளிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த இளம்பெண்ணை அடையவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அந்த இளம் பெண்ணோ ஜோஸின் விருப்பத்துக்கு மறுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இளம்பெண்
இந்நிலையில், தாம் ஏற்றுமதி தொழில் செய்து வருவதால், அதை பற்றி சொல்லி தருவதாக வீட்டிற்கு இளம்பெண்ணை கூப்பிட்டுள்ளார். பல நாள் தவிர்த்து வந்த நிலையில், போன வாரம் ஜோஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் இளம்பெண். வீட்டுக்குள் நுழைந்ததும், இளம்பெண்ணிடம் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஜோஸ். கட்டிப்பிடித்து, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தவும், அதிர்ச்சியானார் இளம்பெண்.

கல்யாணம்
உடனே "நான் உங்களை காதலிக்கிறேன், இதை பற்றி நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன் அதற்குள் நீங்கள் இப்படி அவசரப்படுகிறீர்களே. நம்ம 2 பேர் வீட்டிலும் பேசி, பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம்" என்று எதைஎதையோ சொல்லி, அங்கிருந்து உடனே தப்பித்து வெளியேறி விட்டார்.

பாலியல் புகார்
வீட்டிற்கு வந்து, தந்தை வின்சென்ட்டிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, வின்சென்ட் மாதவரம் போலீசில் பாலியல் புகார் கொடுக்கவும், ஜோஸை கைது செய்து விசாரித்தனர்.

குறி
அப்போதுதான், பல திடுக் விஷயங்கள் ஜோஸ் பற்றி தெரியவந்தது. வசதியான, கல்லூரி மாணவிகளை குறி வைத்து, தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கூறி, பலரை ஏமாற்றி அவர்களின் வாழ்வை சீரழித்து உள்ளார் ஜோஸ். இதையடுத்து, போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications