பொண்ணுங்க அழகா இருந்தாங்க.. அதான்.. அசிங்கமாக பேசி அடி வாங்கிய 3 வாலிபர்கள்!
சென்னை ரயிலில் பெண்களை மோசமாக கேலி செய்த நபர் கைது
Recommended Video

சென்னை: "சார்.. பொண்ணுங்க ரொம்ப அழகா இருந்தாங்க.. ஆசையா இருந்தது.. அதான்..." என்றதும் சரமாரியாக பொதுமக்கள் இளைஞர்களை அடித்து துவைத்து எடுத்து விட்டார்கள்.
நேற்று மதியம் 1.30 மணி இருக்கும். பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரிக்கு ஒரு எலக்டரிக் ட்ரெயின் போய் கொண்டிருந்தது.
சிந்தாதிரிப்பேட்டை அருகே ரயில் வந்தபோது அதில் 3 இளைஞர்கள் ஏறினார்கள். 3 பேருமே தண்ணி அடித்திருந்தார்கள். ஏறியதும் கம்பார்ட்மென்ட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று ஒரு லுக் விட்டார்கள். அப்போது 4 பெண்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.

ஆபாச பேச்சு
3 பேரும் அவர்களிடம் போய் நின்று கொண்டார்கள். போதை அதிகமாக இருந்ததால் கெட்டியாக கம்பியையும் பிடித்து கொண்டார்கள். இப்போது ஒருவர் மாற்றி ஒருவராக அந்த பெண்களிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்தார்கள்.

சேட்டையை தொடங்கினர்
நேரம் ஆக ஆக டபுள் மீனிங் வார்த்தைகள் அந்த பெண்களை காதை அடைத்து கொள்ள செய்தது. கொஞ்ச நேரத்தில் கோட்டூர்புரம் ஸ்டேஷன் வந்தது. அதன்பின்னர் அந்த பெண்களின் பக்கத்தில் 3 பேரும் உட்கார்ந்துகொண்டு அவர்களிடம் சேட்டை செய்ய ஆரம்பித்தார்கள். அப்போதுதான் ஒரு பயணி இதை கவனித்தார்.

ரயில்வே போலீசார்
ஆத்திரப்பட்டு அந்த நபர் தன் சீட்டிலிருந்து எழுந்து வந்து 3 பேரில் ஒருவரின் கன்னத்தில் அறைந்து சரமாரியாக திட்ட ஆரம்பித்தார். உடனே தரமணி ஸ்டேஷன் வந்ததும் 3 பேரும் தப்பி ஓட முயன்றனர்.ஆனால் மற்ற பயணிகள் எல்லாம் சேர்ந்து விரட்டியதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அழகா இருந்தாங்க
விசாரணையில், "கூலி வேலை செய்கிறேன்.. அந்த பொண்ணுங்க 4 பேருமே அழகா இருந்தாங்க. அதனாலதான் கிட்ட போனோம். பேசணும்னு ஆசையா இருந்தது. செல்போன் நம்பர் கேக்கலாம்னு பக்கத்துல உட்கார்ந்தோம்" என்றார். இதையடுத்து போலீசார் அவரை தங்களுடன் அழைத்து சென்றார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications