ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. வெட்டி கொண்ட கள்ள காதலர்கள்.. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி வார்டு பாய்க்கு அரிவாள் வெட்டு விழுந்தது
சென்னை: ஒரு கள்ளக்காதலிக்கு 2 பேர் அடித்து கொண்டு.. அரிவாள் வெட்டு வரை போயுள்ள சம்பவம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரவி என்பவர் வார்டு பாயாக வேலை பார்க்கிறார்.. இவர் வியாசர்பாடியை சேர்ந்தவர். இன்று காலை 8 மணி அளவில், புறநோயாளிகள் பிரிவில் ரவி வழக்கம்போல் வேலையில் இருந்தார்.
அப்போது திடீரென தண்டையார்பேட்டையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் உள்ளே அரிவாளுடன் புகுந்தார்.. அங்கிருந்த ரவியை சரமாரியாக வெட்ட தொடங்கினார்.

சிதறி ஓடினர்
இதை பார்த்த அங்கிருந்த நோயாளிகளும் டாக்டர்களும் தலைதெறிக்க சிதறி ஓடினர். இதில், ரவியின் வலது கால், இடது தலை பகுதிகளில் பலமான வெட்டு விழுந்தது. இதையடுத்து உடனடியாக ரவியை அங்கிருந்தோர் சிகிச்சையில் அனுமதித்தனர்.

கணவரை இழந்தவர்
பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ஐயப்பனை மடக்கி பிடித்தனர்.அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு காதல் சமாச்சாரத்தினால் வந்த தகராறு என்று தெரியவந்தது. ரவியின் காதலியின் பெயர் ராஜேஸ்வரி.. இவர் கணவரை இழந்தவர்.. ஒப்பந்த தொழிலாளியாக அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

எச்சரிக்கை
ஆனால் அதே சமயம் அய்யப்பன் என்பவரிடமும் அந்த பெண் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரவியுடன் அந்த பெண் பழகுவது அய்யப்பனுக்கு தெரிந்துவிட்டது. அதனால் பலமுறை ரவியை எச்சரித்துள்ளாராம்.. ஆனால், தொடர்ந்து ராஜேஸ்வரியுடன் ரவி உறவை துண்டிக்கவில்லை.. இதனால்தான் ஆத்திரம் அடைந்து ஐயப்பன் ரவியை சரமாரியாக வெட்டியதாக முதல்கட்டமாக தெரியவந்தது.

விசாரணை
அரிவாளை எடுத்து ரவியை வெட்டும்போது, ஐயப்பனுக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வண்ணார்பேட்டை போலீசார் ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அரசு ஆஸ்பத்திரியில் காதல் விவகாரத்தில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications