போலி 500 நோட்டால் ஏமாந்த பாட்டியிடம் ஒரு கிலோ மாம்பழத்தை 3000 கொடுத்து வாங்கிய இளைஞர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவெற்றியூரில் மாம்பழம் விற்ற மூதாட்டியிடம் 500 ரூபாய் போலி பணம் கொடுத்து இளம் பெண் ஒருவர் ஏமாற்றியிருந்தார். அந்த மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதை பார்த்து பலரும் அந்த மூதாட்டிக்கு உதவி செய்து வருகிறார்கள். ஒரு இளைஞர், நேற்று போலி ஐநூறு ரூபாய் நோட்டால் ஏமாந்த பாட்டியிடம் ஒரு கிலோ மாம்பழத்தை 3000 கொடுத்து வாங்கி நெகிழ வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஜெயலட்சுமி எ கடந்த 35 ஆண்டுகளாக சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சீசனுக்கு தகுந்தாற்போல பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக கணவர் பழ வியாபாரம் செய்து வந்தார். ஆனால் சில ஆண்டுக்கு முன்புத கணவர் இறந்துவிட்டார் . இப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டி பழங்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே மருத்துவ செலவையும், வாழ்வாதாரத்தையும் கவனித்து வருகிறார்.

Man buys mangoes for 3 000 from a grandmother who had been duped with a fake 500 note

தற்போது கோடைக்காலம் உச்சத்தில் இருக்கிறது. அத்துடன் மாம்பழ சீசன் இருக்கிறது. மூதாட்டி ஜெயலட்சுமி மாம்பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இளம் பெண் ஒருவர் ஜெயலட்சுமியிடம் ரூ.150-க்கு மாம்பழங்களை வாங்கிக்கொண்டு சிறுவர்கள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்த ஜெயலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனைச் சரிபார்த்தபோது, அது உண்மையான பணமல்ல, வெறும் காகிதம் என்பது தெரிந்தது. பணம் பறிபோனதை நினைத்து மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதார். இது கண்போர்களை நெகிழ வைத்தது. ஜெயலட்சுமி போலி நோட்டைக் காட்டி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து தனியார் செய்தி ஊடகங்கள் நேற்று அடுத்தடுத்து செய்தி வெளியிட்டன. இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், "மனிதாபிமானம் எங்கே போனது? ​மாம்பழம் விற்று பிழைப்பு நடத்தும் ஒரு வயதான மூதாட்டியிடம், விளையாடப் பயன்படுத்தும் போலியான 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய அந்தப் பெண்ணின் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

கஷ்டப்பட்டு உழைக்கும் அந்தத் தாய் தான் ஏமாந்ததை நினைத்துக் கண்ணீர் விடுவது நெஞ்சை உலுக்குகிறது. ​நான் அங்கு இருந்திருந்தால், அவரை இப்படி அழ விட்டு வீடியோ எடுத்திருக்க மாட்டேன். உடனடியாக அவர் கையில் 1000 ரூபாயைக் கொடுத்து, அவரது உழைப்பிற்கு மதிப்பளித்து ஆறுதல் படுத்தி இருப்பேன். வீடியோ எடுப்பதற்காக மற்றவர் கண்ணீரை வேடிக்கை பார்க்காதீர்கள். அந்த இடத்தில் உதவி செய்வதே உண்மையான மனிதநேயம்." என்று கூறியிருந்தார்.

இதேபோல் தான் பல நெட்டிசன்கள் பாட்டிக்கு உதவி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தன. சிலர் பாட்டியின் முகவரியை தேடி சென்று உதவியும் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்று போலி ஐநூறு ரூபாய் நோட்டால் ஏமாந்த ஜெயலட்சுமி பாட்டியிடம் ஒரு கிலோ மாம்பழத்தை 3000 கொடுத்து வாங்கி நெகிழ வைத்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+