உயிரோடு சிக்கியது ஆட்கொல்லி புலி.. 21 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு சாதித்த வனத்துறை.. அடுத்து என்ன?
ஊட்டி: 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு T 23 புலி இன்று, மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, புலியை சுட்டுப் பிடிக்க வனத் துறை முடிவு செய்தது.

சுட்டு பிடிக்க கூடாது
இந்த நிலையில், பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த ஹைகோர்ட் புலியை சுடக் கூடாது என உத்தரவிட்டது. ஹைகோர்ட் உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டி23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

மயக்க ஊசி
இதற்காக வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் நேற்று இரவு புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

2 ஊசிகள்
மசினகுடி - முதுமலை சாலையில் புலி நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழு நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியது. அதில், இரண்டு ஊசிகள் புலி உடம்பில் சென்று சேர்ந்தது. இந்த நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் அரை மயக்க நிலையில் தப்பி ஓடியது.

தப்பியோடியது புலி
மயக்க ஊசி செலுத்திய பிறகும், புலி தப்பியோடியதால் வனத் துறையினர் சோர்வடைந்தனர். இருப்பினும் புலியை அப்படியே விட்டு விட்டால் மக்களுக்கு ஆபத்து என்பதால், மீண்டும் உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு, புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள் வருகை
21ஆவது நாளாக வனத்துறையினருக்கு T-23 புலி போக்கு காட்டி வந்தது. எனவே கும்கி யானைகளை வனத் துறையினர் வரவழைத்தனர். இந்த நிலையில்தான், மசினகுடி வன சோதனை சாவடி அருகே சாலையை புலி கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. எனவே அங்குள்ள வனப் பகுதிக்குள் வனத் துறையினர் சென்றனர். இன்று மதியம் வேளையில், மசினகுடி அருகே, மயக்க ஊசி செலுத்தப்பட்டு புலி பிடிக்கப்பட்டது. இதனால் வனத்துறையினரும், பொது மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். முதல் முறையாக ஆட்கொல்லி புலி இந்த வனப் பகுதியில் உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வனப் பகுதியில் இதற்கு முன்பு இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டபோது 3 புலிகள் சுட்டுதான் பிடிக்கப்பட்டனவே தவிர, உயிரோடு பிடிக்கப்படவில்லை.

அடுத்து என்ன?
குறிப்பிட்ட இந்த புலி 2012ம் ஆண்டு முதல் அந்த வனப் பகுதியில் வாழ்ந்து வந்தது. ஏதாவது சில புலிகள்தான் மனிதர்களை கொல்லும் புலியாக மாறுகிறது. இது மிகவும் அரிதானது. ஏனெனில் வனத்திற்குள், காட்டு மாடு, மான் போன்றவை இருப்பதால், அவை பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்திற்கு இரைக்காக வருவதில்லை. ஒருவேளை இப்படி மனிதர்களை தாக்கி, அது பிடிபட்டால், வன உயிரினம் என்ற அந்தஸ்தை இழந்து விடும். பிடிபட்ட புலி முதலில் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும். அதன் பிறகு கூண்டை பயன்படுத்தி, வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications