அந்த டீலிங் புடிச்சிருக்கு.. ரூ1 லட்சம் போனை தூக்கிய குரங்கு! பேரம் பேசி வாங்கிய உரிமையாளர்! வீடியோ
சென்னை: குரங்குகள் செய்யும் சேட்டையினை சொல்லி மாளாது. அப்படித்தான், கோவிலுக்கு சென்ற வாலிபர் ஒருவரின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட சாம்சங் போனை குரங்கு ஒன்று தூக்கிச்சென்றது. அந்த செல்போனை குரங்கிடம் இருந்து மீட்க வாலிபர் செய்த டீலிங் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
விலங்குகளில் கொஞ்சம் அல்ல ரொம்பவே வித்தியாசமானது குரங்குகள். கிட்டத்தட்ட மனிதனை போலவே குரங்குகள் பல விஷயங்களையும் செய்வதை பார்க்க முடியும். குற்றாலம், திருப்பரங்குன்றம் போன்ற மலைப்பகுதிகளுக்கு சென்றால் குரங்குகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. சுற்றுலா பயணிகளிடம் சில நேரங்களில் இந்த குரங்குகள் தனது செல்ல சேட்டையை காட்டிவிடும்.

இணையத்தில் டிரெண்ட் ஆகும் வீடியோ
சுற்றுலா பயணிகள் தங்கள் உடைமைகளை எங்காவது மறந்துவிட்டு சென்றால், அதை தூக்கி வைத்து கொண்டு எப்.பி.ஐ அதிகாரிகளை விட அதிக சோதனை செய்கிறதே என நினைக்கும் அளவுக்கு ஹேண்ட்பேக்கில் ஒவ்வொரு ஜிப்பையும் திறந்து பார்க்கின்ற இந்த குரங்குகள், அந்த உடைமைகளில் தனக்கு தேவையான தின்பண்டங்கள் இருக்கிறதா? என பார்த்துவிடும்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது, சிறுவயதில் நாம் சேட்டை செய்தால், குரங்கு சேட்டை செய்யாதே என பெரியவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்பது எளிதில் புரிந்துவிடும் அளவுக்கு இருக்கும். இப்படி குரங்குகள் செய்யும் சேட்டைகள் அவ்வப்போது இணையத்தில் வைரல் டிரெண்ட் ஆகும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
1 லட்சம் ரூபாய் செல்போனை தூக்கிய குரங்கு
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மற்றும் விருந்தாவன் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் என்பது தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். அடிக்கடி அங்கு உள்ள கோவில்களுக்கு செல்லும் மக்களின் உடைமைகளை திருடிவிட்டு கண்ட இடத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின்றன. இதனால், குரங்குகளிடம் இருந்து பொருட்களை மீட்க சில நேரம் அவைகளுக்கு லஞ்சமும் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் நடைபெற்று இருக்கிறது.
மதுரா சென்ற நபர் ஒருவரின் எஸ்.25 அல்ட்ரா ஸ்மார்ட் போன் ஒன்றை குரங்கு ஒன்று தூக்கி சென்றது. ஒரு லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட இந்த செல்போனை குரங்கு எடுத்து சென்று ஒரு கட்டிடத்தின் மேற்பகுதியில் உட்கார்ந்து கொண்டது. அந்த குரங்கிடம் இருந்து போனை மீட்க அங்கு இருந்த சிலர் படாத பாடுபட்டனர். குரங்கு சாப்பிடுவதற்காக புரூட்டி ஜூஸ் பாக்கெட்டை தூக்கி எறிந்தனர். அவற்றில் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்த நிலையில், ஒரு புரூட்டி பாக்கெட் சரியாக குரங்கின் கையில் சிக்கியது.
அந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு
இதையடுத்து, உடனே அதை பிடித்த குரங்கு கையில் இருந்த செல்போனை தூக்கி கீழே போட்டது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் சரியான டீலிங்க்தான்.வடிவேலு சொல்வது போல அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு என குரங்கு செல்போனை விட்டு கொடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்களோ, சூழ்ச்சி வலையில் குரங்கு சிக்கிக் கொண்டுள்ளது.10 ரூபாய் பாக்கெட்டை வைத்து 1 லட்சத்தை மீட்டு விட்டார்கள் என ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications