மனைவி மீது கோபம்! சென்னை மெரினாவில் அதிவேகமாக ஓட்டிய நீல நிற காரின் ஓனர் வாக்குமூலம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நீல நிற கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற விவகாரத்தில் காரில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் வேகமாக காரை ஓட்டியதாகவும் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தப்பிச் சென்றதாகவும் அபிஷேக் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று அதிகாலை மெரினா கடற்கரை சாலையில் நீல நிற கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றது. இந்த கார், மெரினாவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த கார் சென்றுக் கொண்டிருந்தது.
அதிலும் குறிப்பாக மெரினா காமராஜர் சாலை- விவேகானந்தர் இல்லம் அருகே எதிர்புறத்தில் இருந்து கடற்கரை சாலைக்குள் சென்ற போது திடீரென பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்றும் காரில் சாகசம் செய்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது ரிவர்ஸில் சென்ற அந்த கார், அந்த காவலரை இடிக்கும் வகையில் முன்னோக்கி பாய்ந்தது. அப்போது சுதாரித்துக் கொண்ட காவலர் உடனடியாக ஒதுங்கியதால் அந்த கார் மின்னல் வேகத்தில் வந்து வலது புறமாக திரும்பியது. அந்த காரில் ஒரு இளைஞரும் இரு இளம்பெண்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த காரை மீண்டும் பிடிக்க முயன்ற போதும் போக்கு காட்டி தப்பியது. தற்போது அந்த காரின் பதிவெண் கொண்டு, யாருடைய கார், காரை இயக்கியது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்தது.
அந்த காரின் பதிவெண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. காரில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் காரை வேகமாக ஓட்டியதாகவும் போலீஸார் தடுத்து நிறுத்திய போது பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தப்பிச் சென்றதாகவும் அபிஷேக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற தனிப்பட்ட கோபத்தில் காரை வேகமாக இயக்கிய போது யார் மீதாவது கார் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு என போலீஸார் கண்டித்தனர். மேலும் இது போன்ற கோப தாபங்களுக்காக பொதுமக்களுக்கு தொல்லை தருவது சரியல்ல என்றும் எச்சரித்தனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!












Click it and Unblock the Notifications