Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் தான் சீதாராம் யெச்சூரி.. பல மரபுகளை உடைத்தவர்.. சத்தமின்றி பல சாதனைகளை படைத்தவர்.!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நுரையீரல் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த அவர் ஆகஸ்ட் 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று காலமானார். சீதாராம் யெச்சூரி பல அடையாளங்களைக் கொண்டவர். அவர் ஒரு மார்க்சிஸ்ட்.. பல மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர்.. அவரால் அறிஞர்கள் நிறைந்த அரங்கத்திலும் பேச முடியும். பாமர மக்கள் இருக்கும் தெருக் கூட்டங்களிலும் அவர்களைக் கவரும் வகையில் பேச முடியும். அந்தளவுக்குப் பேச்சாற்றல் மிக்க ஒரு தலைவராகவே அவர் இருந்தார்.

கடந்த 1952இல் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் உள்ள தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது தந்தை ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியியலாளராக இருந்தார்.

Sitaram yechury CPM

தாயார் அரசு ஊழியராகவும் இருந்தார். 1969ஆம் ஆண்டு தெலுங்கானா போராட்டம் வரை இவரது குடும்பம் ஹைதராபாத்தில் தான் இருந்தது. அங்கே தான் இவர் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார்.

சீதாராம் யெச்சூரி: அதன் பின்னர் அவரது குடும்பம் டெல்லிக்குச் சென்றது. டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்த சீதாராம் யெச்சூரி, அதில் தங்க பதக்கம் பெற்றார். அதேநேரம் மேற்படிப்பிற்குப் புகழ்பெற்ற டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படிக்க அவருக்கு இஷ்டம் இல்லை. அதற்குப் பதிலாக அப்போது புதிதாக நிறுவப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தார். அதுதான் அவரது வாழ்க்கையை மாற்றிய முடிவு என்றே சொல்லலாம்.

அவர் இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி நகர்ந்தது இங்கே தான்.. அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியதும் அங்கே தான். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஜேஎன்யு வேந்தராக இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். போராட்டம் தொடர்ந்து நடைபெறவே இந்திரா காந்தியை ஒரு கட்டத்தில் தனது வேந்தர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் அவருக்கு நல்ல செல்வாக்கு கிடைத்தது.

தேசியத் தலைவர்: சுமார் 50 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில், அவர் பல மரபுகளை உடைத்தார். சீதாராம் யெச்சூரி இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஆனது இதில் முதலாவது. அதற்கு முன்பு வரை இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசியத் தலைவராகக் கேரளா அல்லது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வாகி வந்தனர். அதை முதலில் உடைத்தவர் சீதாராம் யெச்சூரி.

அதேபோல அவர் சிபிஎம் கட்சியின் மாவட்ட அல்லது மாநில பிரிவுக்கு எப்போதும் தலைமை வகித்ததில்லை. இருப்பினும், அவர் 32 வயதில் மத்தியக் குழு உறுப்பினராகவும், 40 வயதில் பொலிட்பீரோ உறுப்பினராகவும் ஆனார். சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் கடந்த 2015இல் முதல்முறையாகத் தேர்வான நிலையில், பிறகு மூன்று முறை அதே பதவிக்குத் தேர்வானார்.

அவரது ஸ்டைல்: அவர் கடந்த 2005 முதல் 2017 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் சீதாராம் யெச்சூரி மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும், கட்சியின் விதிகள் காரணமாக அவருக்கு 3வது முறை வாய்ப்பு தரப்படவில்லை. புத்திசாலித்தனமான எம்பி என்ற பெயரைப் பெற்ற அவரது பேச்சுகளில் நகைச்சுவையும் இருக்கும். வரலாற்றில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தி, நிகழ் கால பிரச்சினையை விளக்குவதே அவரது ஸ்டைல் ஆகும்.

மேலும், கூட்டணி அரசியலிலும் தவிர்க்க முடியாத முகம் சீதாராம் யெச்சூரி.. 1996இல் என்டிஏ அரசு, 2004 & 2009ம் ஆண்டுகளில் யுபிஏ அரசு அமையும் போது குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 2023இல் இந்தியா கூட்டணியை உருவாக்குவதிலும் அவரது அங்கு முக்கியமானது. இப்படிப் பல முகங்களைக் கொண்ட சீதாராம் யெச்சூரி, இன்று நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+