உடம்பு சரியில்லைன்னு ஆபீஸ்ல லீவு எடுக்கனுமா? ஒரு வாரம் முன்னாடியே சொல்லிரனும்! மேனேஜர் போட்ட ஆர்டர்
சென்னை: அலுவலகம் என்றாலே ரகம், ரகமான மனிதர்கள் இருப்பதும், அங்கே சின்ன சின்ன அலப்பறைகள் நடப்பதும் வழக்கம்தான். ஆனால், நம்ம நாட்டிலுள்ள ஒரு ஆபீசில் மேனேஜர் ஒருவர் போட்ட புதிய ரூல்ஸ் குபீர் சிரிப்புக்குள்ளாக்கியுள்ளது.
"என்னதான் நைட் ஷிப்டா இருந்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வரணும் இல்லயா." என்கிற சந்தானம் திரைப்பட காமெடி மிகவும் பிரபலம். இந்த சம்பவம் நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும். இப்படித்தான் ஒரு நிறுவனத்தின் மேனேஜருக்கும், அவரின் ஊழியருக்கும் நடந்த வாட்ஸ் அப் உரையாடல் வைரலாகி வருகிறது.

பள்ளிப் பருவத்தில், 'As iam suffering from fever' என்ற லீவ் லெட்டரில் தொடங்கி, கார்ப்பரேட் கம்பெனி வேலை வரை நம்மவர்கள் லீவ் எடுக்க டிஸைன் டிஸைனான காரணங்களை தேடுவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில், "ரூல்ஸா இருந்தாலும் ஒரு வரைமுறை வேண்டாமாப்பா. இப்படி அநியாயம் பண்ணறீங்களே." என்று சொல்லுமளவுக்கான சம்பவம் ஒரு அலுவலகத்தில் நடந்துள்ளது.
"அட என்னப்பா.. நம்ம அலுவலகத்தில் பார்க்காத சம்பவங்களா. இங்க நடந்திருக்கப்போகுதுனு.." சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேட்குது." ஆனால், இது வேற மாறி வேற மாறி..
ஊழியர் ஒருவர் தனக்கு உடம்பு சரியில்லை எனக் கூறி என்று தன் ஹெச்ஆர் மேனேஜரிடம் லீவு கேட்டு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு அவரது மேனேஜர், "சிக் லீவா" என்று கேள்வி கேட்டாராம். அதற்கு இவரும் ஆமாம் என்று சொல்லியுள்ளார். அடுத்து மேனேஜர் கேட்ட கேள்விதான் அதிரிபுதிரி ரகம்.
"சிக் லீவா இருந்தாலும், கேஷுவல் லீவா இருந்தாலும், 7 நாளுக்கு முன்னால் தகவல் சொல்லனும்." என்று கூறியுள்ளார். மேனேஜருடனான தனது வாட்ஸ் அப் உரையாடலின் ஸ்கிரீன் சாட்டை அந்த ஊழியர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

"7 நாளுக்கு அப்புறம் எனக்கு காய்ச்சல் வரும் இல்லைனா சளி பிடிக்கும்னு உங்களால சொல்ல முடியும்னு நினைக்கிறீங்களா. சொல்லியே ஆகனும் அப்பதான் லீவு தருவோம்." என்று இந்த உரையாடலை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும், "உடல்நிலை சரியில்லை என்று ஒவ்வொரு திங்கள்கிழமை காலையிலையும் மெயில் அனுப்புங்கள். அடுத்த திங்கள்கிழமை கேன்சல் செய்துவிட்டு, மீண்டும் உடல்நிலை சரியில்லை என ஒரு புதிய மெயிலை அனுப்புங்கள். எதோ ஒருநாள் இதை பயன்படுத்திக்கலாம் என்றும்." அந்த ஊழியருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். மேலும் சிலர் லீவ் எடுக்க தங்களின் பர்ஸ்னெல் அனுபவங்களை பகிர்ந்து, "இந்த டெக்னிக்ல லீவ் எடுங்க. இப்ப என்ன சொல்கிறார்." என பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு வார்த்தை பிழை, இப்போ வாழ்க்கை பிழையாகிபோச்சே மேனேஜர் சார்ர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications