மணப்பாறை அதிமுக எம்எல்ஏவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன்.. மனைவியே சிறுநீரக தானம் செய்தார்
சென்னை: மணப்பாறை சட்டசபைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சந்திரசேகருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை சென்னையிலேயே 3 மாதம் தங்கியிருந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் சந்திரசேகர். இவர் மணப்பாறை தொகுதியில் இரண்டாவது முறை எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

கடந்த ஒரு வருடமாகவே சிறுநீரகம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சந்திரசேகர் எம்.எல்.ஏ.தள்ளப்பட்டதால், அவருக்கு சென்னை அப்பல்லோவில் சில நாட்களுக்கு முன்பு சிறுநீர்க மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது.
தனது மனைவியின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை பொருத்தியுள்ளார் சந்திரசேகர். அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அப்பல்லோ மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது எம்எல்ஏ நலமாக உள்ளாராம்.
அவரை சென்னையிலேயே 3 மாதங்கள் வீடு பிடித்துத் தங்கியிருக்குமாறும், தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால் எம்எல்ஏ மற்றும் குடும்பத்தினர் இங்கேயே தங்கியுள்ளனராம்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications