2 தொகுதி இடைத் தேர்தல்..தவெக கூட்டணி வேட்பாளர்கள் யார்? விஜய்க்கு முன்னதாகவே முந்திக் கொண்ட தாகூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தற்போது மற்றும் ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிறகு விஜய் தலைமையில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி உருவாகி இருக்கிறது. இதில் காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் திரண்டு உள்ளன. இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர்.கூட்டணிக்கு தலைமையாக விஜய் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக வேட்பாளர் குறித்து பேசி இருக்கிறார் என அதிருப்தியில் இருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலை யாரும் மறந்து விட முடியாது. தமிழகத்தை ஆண்ட திமுக, அதற்கு முன்பு ஆண்ட அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளியது தவெக. சட்டசபைத் தேர்தலில் முதன் முறையாக தனித்து தேர்தலில் களம் கண்ட தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியானது.

Manickam Tagore

ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இல்லாததால் கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது. பின்னர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்தனர்.

தவெக கூட்டணி

இடையில் அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கவும், அதற்கு பிறகு திருமாவளவனை முதல்வராக்கவும் முயற்சிகள் நடந்ததாக வெளியான பேச்சுகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இறுதியில் ஒரு வழியாக முதல்வராக விஜய் பதவியேற்றார். ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் ஏற்கனவே சொல்லி இருந்ததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

இடைத்தேர்தல்

இதற்கிடையே அதிமுகவிலிருந்து விலகிய விஜயபாஸ்கர் மற்றும் சில எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் திடீரென தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ரதிமுக வேட்பாளர்கள்

அக்டோபர் 6ஆம் தேதி வாக்கு பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. முதல் கட்சியாக அதிமுக விருப்ப மனு பெறப்படும் என அறிவித்த நிலையில், அடுத்த நாளே திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும் தாராபுரத்தில், சுகன்யாவும் களமிறங்க உள்ளனர். இது ஒரு புறம் இருக்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறக்ஜே கூட்டணியை உறுதி செய்யும் வேலைகளை தமிழக வெற்றி கழகம் தொடங்கி இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம்

தற்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை சட்டமன்றத்தில் ஆதரவளித்து வருகின்றன. அதே நேரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக 2 எம்எல்ஏக்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்கள் திமுக உறுப்பினர்களாகவே தொடர்வோம் என சொல்லிவிட்டனர். ஆனால், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விஜய்க்கு ஆதரவளிப்போம் எனச் சொல்லியிருக்கிறார்.

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி

தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

மாணிக்கம் தாகூர்

தொடர்ந்து கூட்டணி கட்சிதலைவர்கள் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில் பின்னர் பேசிய காங்கிரஸ் கமிட்டி தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழக வெற்றிக் கழக கூட்டணி தமிழகத்திலும் புதுச்சேரியும் செயல்படும் எனவும், அடுத்தடுத்த செயல்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும், சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிடும் என கூறி இருந்தார்.

வேட்பாளர் அறிவிப்பு

மேலும் இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாகவே மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியும் செயல்படும் என சொன்னார். அது மட்டுமில்லாமல் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம் எனவும் கூறி இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தான் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என சொல்லப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தவிர்த்து நேரடியாகவும், தன்னிச்சையாகவும் மாணிக்கம் தாகூர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+