அடிமை ஆட்சி..முடிஞ்சா மோடிக்கிட்ட கேட்டுப் பாருங்களேன்! தைரியம் இருக்கா! வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து மாண்புமிகு அமைச்சர் ராஜேஷ்குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் எனவும், எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் மீது வீண் பழி போட்டு உங்கள் வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகு 2017-ல் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது!

Manickam Tagore Edappadi Palaniswami NEET

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, உங்கள் அடிமை ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை உங்களால் எப்போதும் மறைக்க முடியாது.

ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை யோசித்தாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயக்கம் காங்கிரஸ். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது! ஆனால் பாஜக அரசோ 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை' போல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் NTA என்ற ஒரே அமைப்பிடம் கொடுத்து, வினாத்தாள் கசிவு, ஊழல், பயிற்சி மைய மாஃபியாக்கள் என நீட் தேர்வை வணிகச் சந்தையாக்கிவிட்டது.

அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயும் 'பிடித்த முயலுக்கு மூன்று கால்' என மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
அவர்கள் உறுதியளித்தபடி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: "எந்த மாநிலத்திற்கு நீட் வேண்டாம் என்று நினைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும்." இதை உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சொல்ல வைக்க முடியுமா?

பாஜகவின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, மாணவர்களின் நலனுக்காக "தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்" என்று மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் இப்போதாவது உங்களுக்கு இருக்கிறதா
எடப்பாடி பழனிசாமி அவர்களே?" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+