மாணிக்கம் தாகூர் பாயிண்டை பிடிச்சிட்டாரு! அதிகாரப் பகிர்வுக்கு திமுக ஓகே சொல்லுமா? கூட்டணி உடையுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல மாதங்களாகவே திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகின்றன.. தமிழ்நாட்டில் கூட்டணி அரசியல் குறித்து மாணிக்கம் தாகூர் சொல்வதென்ன? திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, சொல்ல வருவதென்ன? காங்கிரஸின் கோரிக்கை சாத்தியமாகுமா?

தமிழகத்தில் 9 காங்கிரஸ் எம்பிக்கள் உள்ள நிலையில், செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தில் அன்று மோதல் போக்கில் ஈடுபட துவங்கியதிலிருந்தே கூட்டணிக்குள் விரிசல் விழ துவங்கிவிட்டதாக முணுமுணுப்புகள் எழுந்தன..

Manickam Tagore DMK Key Seat

கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்னாள் தலைவர் அழகிரி அன்று கொளுத்தி போடவும், அது திமுகவுக்கு கடுப்பையே தந்திருந்தது.. இதே கருத்தைதான், சட்டப்பேரவை கட்சி தலைவரான ராஜேஷ்குமாரும் ஆட்சியில் பங்கு என்று சொன்னார்.. இதையே செல்வப்பெருந்தகையும் கூறினார்..

ஆட்சியில் பங்கு - திமுக கூட்டணி

அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம், ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார் என்று கூறியதும் என்று பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் கூறியிருந்ததும், திமுகவுக்கு எரிச்சலையே தந்திருந்ததாக கூறப்பட்டது.

இதனை தவிர, சில காங்கிரஸ் எம்பிக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள், அலுவலகம் அமைத்து தரவில்லை என்றும், காங்கிரஸ் எம்பிகளுக்கு சில திமுக நிர்வாகிகளால் இடையூறுகளும் தரப்படுகின்றன என்றும் புகைந்து கொண்டிருக்கின்றன.. மொத்தத்தில், காங்கிரஸ்- திமுக இடையே கடை நிலையில் சுமூகமான உறவு இல்லை என்கிற அளவுக்கு பேச்சுகள் எழுந்தன.

மாணிக்கம் தாகூர்

இது ஒருகட்டத்தில் விஜய்யுடன் மேலிட காங்கிரஸ் பேச்சுவார்த்தை என்கிற அளவுக்கு கூட்டணி விவகாரம் சலசலப்பை தந்துகொண்டிருக்கிறது.. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.. அத்துடன் தன்னுடைய கருத்து ஒன்றையும் அதில் பதிவிட்டுள்ளார்..

அதில், "தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல - அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! " என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் காங்கிரசுடன் திமுக இணக்கமாக இருந்தாலும், தமிழகத்தின் கோஷ்டி பூசல், வேட்பாளர், சீட் விவகாரம், தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களில் அதிருப்தி உள்ளதாகவே தெரிகிறது.

தனித்து போட்டியிடலாமே

ஏற்கனவே, "கூட்டணி பலத்தால்தான் திமுக வென்றிருக்கிறது.. கூட்டணி இல்லையென்றால், எங்களைவிட அவர்களுக்குதான் இழப்பு அதிகம்,. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது திமுகவுக்கு தெரியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம், சமீபத்தில் பட்டவர்த்தனமாக சொல்லியிருந்தார்..

அதாவது கடந்த முறையே கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சீட்களை தந்தாகிவிட்டது. இப்போது கூடுதலாக கேட்போம் என்கிறார்கள். தங்களை நம்பிதான் திமுகவே உள்ளது என்பதை வெளிப்படையாகவே சண்முகம் சொல்லியிருந்தார்..

கம்யூனிஸ்ட் கட்சிதான் பெரிய கட்சி என்கிறார்களே? எதுக்கு திமுக கிட்ட 5 சீட், 6 சீட் வாங்கிட்டு இருக்கணும்? பேசாமல் 234 தொகுதிகளிலுமே கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிடலாமே? வரும் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஒன்றுசேர்ந்து போட்டியிட்டு, ஒரு எம்எல்ஏ சீட்டையாவது வெற்றி பெற்று காட்டட்டுமே? என்றெல்லாம் இணையத்தில் கருத்துக்களும் பதிவாகியிருந்தன.

தீயை கிளப்பி - அணைத்த திருமாவளவன்

அதேபோல விசிக தலைவர் திருமாவளவன் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்று பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது.. ஆனால் அது பலவிதமான தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்திவிட்டது.. பிறகு திருமாவளவன், 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்பது விசிகவின் கொள்கை. ஆனால், இப்போதைய பல்வேறு சூழல்களை பொருத்தி பார்க்கும்போது திமுக கூட்டணியில் விசிக இணக்கமாக இருக்கிறது என்று சொல்லவும், அந்த சலசலப்பு முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.

இப்போது அதே குரலை காங்கிரஸ் ஒலிக்க துவங்கியிருக்கிறது.. "கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது" என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளது திமுகவின் கவனத்தை பெற்றுள்ளது.. எனினும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெரும்பான்மையாக பெறுவதற்கு காங்கிரஸுக்கு குறிப்பிட்ட அளவில் திமுக சீட் எண்ணிக்கையை உயர்த்தும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+