இப்படியே இருங்க விளங்கிடும்.. ஸ்டாலினை சீண்டிய மாணிக்கம் தாகூர்.. உதயநிதி, எடப்பாடிக்கும் அட்டாக்
சென்னை: இடைத்தேர்தல் தோல்வி குறித்த முக ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு, தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டு இப்படியே இருங்க விளங்கிடும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கிண்டலாக பதிலளித்துள்ளார். மேலும், தங்கள் கட்சிகளை யார் ரொம்ப வேகமாக கீழே இழுத்துக் கொண்டு செல்வது என்பதில் தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதிக்கு இடையே போட்டியே என்றும் விமர்சித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வியில் வெற்றி என்றும், தவெகவிற்கு வெற்றியில் தோல்வி என்று தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, இப்படியே இருங்க. தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள். விளங்கி வந்துவிடும்.

எடப்பாடிக்கும், உதயநிதிக்கும் போட்டி
மக்கள் திமுகவை தோற்கடித்திருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததால் தான் திமுகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவிற்கு 8 ஆயிரம் ஓட்டுகள் குறைந்திருக்கின்றன. இதிலேயேும் மகிழ்ச்சி கொண்டாடிக் கொண்டே இருந்தால் என்ன சொல்வது. மக்கள் எவ்வளவு தண்டித்தாலும் அவர்களின் ஆணவத்தையும், அகங்காரத்தையும் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் வருத்தமாக உள்ளது.
திமுகவைப் பொருத்தவரை மூன்றாம் இடம் பிடிப்பார்கள் என்று நினைத்தனர். அவர்களை விட வேகமாக அதிமுகவை கீழே இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தங்கள் கட்சிகளை யார் ரொம்ப வேகமாக கீழே இழுத்துக் கொண்டு செல்வது என்பதில் தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதிக்கு இடையே போட்டியே.
ராகுல் காந்தி, விஜய் உறவு
மக்களிடமிருந்து திமுக, அதிமுக கட்சிகள் எவ்வளவு தூரமாக செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. திமுக கூட்டணியில் இருந்து பெற்று ஓட்டு இப்போது 8 ஆயிரம் எண்ணிக்கை ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்துள்ளது. அதைப் பற்றி பயப்படாமல், யோசிக்காமல் உள்ளனர். கூட்டணிக் கட்சிகள் தங்களுடன் இல்லையென்று திமுகவினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு கட்சி என எல்லாருடைய ஓட்டும் சேர்ந்துதான் திமுகவிற்கு ஓட்டு கிடைத்துள்ளது. எவ்வளவு கீழே விழுந்தாலும் திமுகவினர் அதனை உணராமல் ஆணவத்தோடு பேசுகின்றனர். மக்கள் அளித்த தீர்ப்பை திமுகவினர் மதிக்காமல் பேசுவது வருத்தத்திற்குரிய விஷயம். ராகுல் காந்தி, விஜய்க்குமான உறவு சகோதரத்துவ உறவு.
அமலாக்கத் துறை வழக்கு
இந்த உறவு பலமான உறவு. இந்த உறவு தமிழகத்தையும், இந்தியாவையும் காக்கக்கூடிய உறவாக இருக்கும். திமுகவினர் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுகவின் மீதான அமலாக்கத் துறை வழக்கு எதுவும் வருவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். நேரு உள்ளிட்டோரின் அமலாக்கத் துறை வழக்குகள் எல்லாம் என்னவாயிற்று.
திமுக பாஜகவை எதிர்த்த வரை அமலாக்கத் துறை, சிபிஐ அனைத்தும் திமுகவிற்கு எதிராக இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியாகிவிட்டனர். பிரதமரும், முதல்வரும் சந்திப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. கொள்கையில் என்ன நிலை, அரசியல் நிலை என்ன என்பது தான் முக்கியம். அதில் தவெகவினர் தெளிவாக உள்ளனர். எங்களைப் பொருத்தவரை நாங்கள் இருக்கிறோம் பாஜகவையும், ஆர்எஸ்எஸ்- ஐ எதிர்ப்பதற்கு என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
