Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமை தொகை.. குறுக்கே வந்த மாணிக்கம் தாகூர்! இப்போ என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் கருத்துக்கள் அரசியல் தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்த அவர் தெரிவித்திருக்கும் கருத்தும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சியில் பங்கு என்கிற விஷத்தை காங்கிரஸ் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் வேலைக்கே ஆகாது என்று என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஆனாலும், காங்கிரஸ் தனது பிடிவாதத்தை தளர்த்தவில்லை.

Manickam Tagore

காங்கிரஸ் கமிட்டியின் தவறு

ஜனநாயகன் திரைப்படத்திற்கு வரிசைக்கட்டி ஆதரவு தெரிவித்ததாக இருக்கட்டும், மாணிக்கம் தாகூரை வைத்து பேச வைத்ததாக இருக்கட்டும், எல்லாமே திமுகவை டார்கெட் செய்வதை போன்றே இருந்தது. நேற்று முன்தினம் கூட மாணிக்கம் தாகூரின் ட்வீட் கூட்டணிக்குள் பற்ற வைத்தது. அந்த ட்வீட்டில் "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு" என்று கூறியிருந்தார்.

2006 தேர்தல்

மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ள 2006 தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக 163 இடங்களில் வெற்றிபெற்றாலும் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. திமுக 96 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தயவோடு ஆட்சியில் பங்கு கொடுக்காமல் திமுக ஆட்சியமைத்தது.

2006-2011 ஆட்சிக்காலத்தை மைனாரிட்டி திமுக ஆட்சி என தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்து வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருந்தார் மாணிக்கம் தாகூர்.

ரூ.5,000 மகளிர் உரிமைத்தொகை

இப்படி இருக்கையில் இன்று மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை என 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 என வரவு வைக்கப்பட்டது. இந்த தொகை சாமானிய மக்களின் வாழ்க்கையில் பேருதவியாக இருக்கும். எனவே அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், மாணிக்கம் தாகூர் மகளிர் உரிமைத்தொகைக்கும் காங்கிரஸ் பங்கு கேட்பதை போல ட்வீட் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தனது ட்வீட்டில்,

மாணிக்கம் தாகூர்

பெண்கள் அதிகாரமடைதல் ஒரு கோஷமல்ல - அது ஒரு பொறுப்பு. தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இன்று மூன்று மாதத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் ரூபாய் 2,000 உதவி வழங்கியிருப்பது அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்த்துகிறது.

கர்நாடகாவில் உரிமைத் தொகை

அதேபோல், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துகிறது. இரு மாநிலங்களும் பெண்களை முன்னுரிமையாகக் கொண்டு குடும்பங்களுக்கு , பொருளாதாரம் வலுப்படும் என்பதை நிரூபித்துள்ளன.

ராகுல் காந்திதான் முன்னோடி

ராகுல் காந்தி கடந்த 2019ல் முன்வைத்த "ந்யாய்" (Nyay மாதம் ரூ 6,000)என்ற கருத்து - பெண்களுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் பார்வை - இந்தியா செல்ல வேண்டிய திசையை காட்டுகிறது: மரியாதை, பாதுகாப்பு, பொருளாதார நீதி. பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும். இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெறட்டும்" என்று கூறியிருக்கிறார்.

இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் ஏதும் சொல்லவில்லை. அதேபோல, இந்த திட்டத்தின் ஐடியாவுக்கு முன்னோடியாக இருந்தவர் ராகுல் காந்திதான் என்கிற வகையில் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாக உடன் பிறப்புகள் கொந்தளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+