மணிப்பூர் நிர்வாண ஊர்வலம்.. முதுகெலும்பில்லாத கோழைகளை தூக்கில் போட வேண்டும்.. குஷ்பு காட்டம்
சென்னை: மணிப்பூரில் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை தூக்கில் போட வேண்டும் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கூறியுள்ளார். சில மனிதர்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்பதை இது காட்டுகிறது என்றும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த மாநிலத்தில் குக்கி எனும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் மைத்தேயி பிரிவு மக்களும் உள்ளனர். இந்நிலையில் தான் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
கடந்த மே மாதம் 3ம் தேதி இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக உருமாறியது. அன்று முதல் கடந்த இரண்டரை மாதமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் இன்னும் வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து போனேன். நமது கூட்டு மனசாட்சி எங்கே? வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கொடூர குற்றத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும், அதனை பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.
வகுப்புவாத கலவரங்கள், குடும்ப சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல், பழிவாங்குதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் என்றாலும் பெண்கள்தான் குறிவைக்கப்படுகிறார்கள். சில மனிதர்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், அழுகியவர்கள் மற்றும் மனிதாபிமானமற்றவர்கள் என்பதை இது காட்டுகிறது என்றும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications