திமுக கூட்டணி.. மமக சார்பில் பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா...மணப்பாறையில் அப்துல் சமது போட்டி
சென்னை: திமுக கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியில் போட்டியிடுகிறார். மணப்பாறையில் அப்துல் சமது வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம். ஹெச். ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதெனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொகுதி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியில் போட்டியிடுகிறார். மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்துல் சமது வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்எல்ஏ இரா.சந்திரசேகர் போட்டியிடுகிறார்., பாபநாசம் தொகுதியில் பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபிநாதனும் போட்டியிடுகின்றார். எனவே, இரு தொகுதிகளிலும் அதிமுக - மமக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications