திமுக கூட்டணியில் 1 சீட்! மனிதநேய மக்கள் கட்சியின் கடைசி நேர முயற்சி! ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி மிக உறுதியாக உள்ளது. இது குறித்து ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாரிவேந்தர் இப்போது பாஜக பக்கம் சென்றுவிட்டார். இதனால் அந்த ஒரு இடத்தை தங்களுக்கு திமுக ஒதுக்க வேண்டும் என எண்ணுகிறார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு ஓரளவு பலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளை காட்டிலும் மமகவும், தமுமுகவும் ஓரளவு ஆக்டிவாக இயங்கி வருவது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் ஜவாஹிருல்லா மிக உறுதியாக இருக்கிறார். இதை ஒன் இந்தியா தமிழில் சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தோம். இப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதால், மமக தரப்பில் மிக கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே திமுகவிடம் 1 சீட் கேட்டது மமக. ஆனால் அப்போது அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டது திமுக. அதனால் தான் இந்த முறை சீட் விவகாரத்தில் மமக இவ்வளவு தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பதால் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பியதும் தான் ஃபைனல் முடிவு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் காலம் காலமாக உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கே 1 சீட் கொடுக்க திமுக தயங்குவது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications