"ராஜா"வுக்கு புது போஸ்ட்டிங்காமே.. சத்தமே இல்லாமல் காய் நகர்த்தும் திமுக.. உதயநிதி சாய்ஸ்..?
உதயநிதி ஸ்டாலின் ஐடி விங் பொறுப்பு டிஆர்பி ராஜாவை பரிந்துரைத்துள்ளாராம்
சென்னை: திமுகவின் ஐடி விங் பதவியை பிடிஆர் ராஜினாமா செய்வதாகவும், அந்த பதவியை எட்டிப்பிடிக்க பலர் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாவும் செய்திகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.
முதன்முதலில் ஆன்லைனில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது அதிமுகதான்.. கடந்த 2014-ல் இதற்காகவே, தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்டு, சோஷியல் மீடியாவில் சிறப்பாக செயல்பட்டன.
2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்க இந்த ஐடி விங் பெரிதும் துணை புரிந்தது என்பதை மறுக்க முடியாது.. அதற்கு பிறகுதான், ஆன்லைன் பிரச்சாரமும் அவசியம் என்பதை திமுக மெல்ல உணர்ந்தது.. அதனால், 2017-ல் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது.

நியமனம்
இந்த ஐடி விங்க செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்... இந்த பொறுப்பை மிக சிறப்பாக செய்தார் பிடிஆர்.. ஐடி விங் தகவல் தொழில்நுட்பங்கள் மூலமாக திமுகவின் பிரசாரத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோனார்... பிடிஆர் அன்று ஏற்படுத்திய வலுவான கட்டமைப்புதான், 2019 தேர்தல் வெற்றிக்கு பெருமளவில் உதவியாக இருந்தது. இப்போது கடந்த சில நாட்களாகவே, திமுகவின் ஐடி விங் குறித்த சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன..

ராஜினாமா?
நிதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி என இரண்டிலும் பொறுப்பில் இருக்கிறார் பிடிஆர்.. இந்த இரண்டிலுமே பணிகள் அதிகம் என்பதால், கட்சி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும்படி, தலைமை கேட்டுக் கொண்டதாகவும், பிடிஆரும் அதற்கு விலக சம்மதித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. பிடிஆர் தன் பதவியை ராஜினாமா செய்தால், அந்த பதவிக்கு அடுத்தடுத்த நபர்கள் போட்டிக்கு தயாராகி விட்டனர்.. தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பதவியை பிடிப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் ரெடியாகிறாராம்..

நடிகர் மகன்
அதேபோல, சென்னையை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் மகனும், நடிகர் கட்சியில் இருந்து வந்தவர் என ஏகப்பட்ட பேர் போட்டி போடுகின்றார்களாம்.. சட்டசபை கூட்டம் முடிந்த நிலையில், விரைவில் இந்த அணி தலைவர் விலகல், புதிய நிர்வாகி நியமனம் வரலாம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.. இதனிடையே இன்னொரு செய்தியும் சில தினங்களுக்கு முன்பு கசிந்தது.. கோவை மகேந்திரன் ஐடி விங் பொறுப்பில் பெரிதாக ஆக்டிவாக இல்லை என்ற பேச்சு உள்ளது..

தோல்வி
அதிமுகவின் ஐடி விங்க் செக்ரட்டரியாக இருந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து அக்கட்சியிலிருந்து திடீரென வெளியேறிய நிலையில், திமுகவின் ஐடி விங் பொறுப்பை பெற முயன்று வருவதாகவும் கூறப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதனிடையே மேலும் ஒரு தகவலும் பரவி கொண்டிருக்கிறது.. இந்த ஐடி விங் செயலாளர் பதவிக்கு, மன்னார்குடி டிஆர்பி ராஜா பெயரும் அடிபடுகிறது.. இதற்கு நிறைய காரணங்களும் சொல்லப்படுகிறது..

டெல்டா
இந்த முறை திமுகவின் அமோக வெற்றிக்கு டெல்டாவும் மிக முக்கியமான காரணம்.. எனவே, டெல்டாவை சேர்ந்த ஒருவருக்கு குறிப்பாக டிஆர்பி ராஜாவுக்கு எப்படியும் அமைச்சர் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் பதவி எதுவும் தரப்படவில்லை.. கடந்த 2011-ல் ஆகட்டும், 2016-ல் ஆகட்டும் டிஆர்பி ராஜா தேர்தலில் வெற்றி பெற்றவர்.. இந்த முறை அபாரமாக வெற்றியை பெற்றவர்.. ஹாட்ரிக் அடித்தவர்.. சோஷியல் மீடியாவில் மக்களுடன் நெருங்கியே இருப்பவர்..

ராஜினாமா?
அமைச்சர் பதவியை இவருக்கு தராவிட்டாலும், ஐடி விங் செயலாளர் பதவியை இவருக்கு தரலாம் என்ற பேச்சு உள்ளதாம்.. இதை திமுகவின் மேலிடத்துக்கு சிபாரிசு செய்ததே உதயநிதி ஸ்டாலின்தான் என்கிறார்கள்.. டிஆர்பி ராஜா உதயநிதியின் நண்பர் என்றாலும், தொகுதியில் தனக்கென செல்வாக்கை அபரிமிதமாக ராஜா பெற்றிருக்கிறார் என்பதே உண்மை.. ஆக, பிடிஆர் தன் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், இந்த பொறுப்புக்கு யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்











Click it and Unblock the Notifications