ஆலங்குளம் சிட்டிங் எம்எல்ஏ.. மனோஜ் பாண்டியனை தூக்கிய திமுக.. கள நிலவரம் யாருக்கு சாதகம்?
சென்னை: ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்கு மிக்க பிரமுகராக விளங்கிய மனோஜ் பாண்டியனை தன்வசம் எடுத்திருப்பதன் மூலம் இந்த தொகுதியில் திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர வாய்ப்புள்ளது. அதே சமயம் ஆலங்குளம் தொகுதியில் இது அதிமுகவுக்கு பின்னடைவாக இருக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை நாடார் வாக்குகள் அதிகம் நிறைந்த தொகுதி ஆகும்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பி எச் பாண்டியனின் மகனான மனோஜ் பாண்டியன் 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஆலடி அருணாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். நாடார் வாக்குகள் அதிகம் கொண்ட தொகுதி என்பதால் இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று ஹரி நாடார் 3வது இடத்தை பிடித்து இருந்தார்.

யார் இந்த பி எச் பாண்டியன்
ஆலங்குளம் தொகுதியை பொறுத்தவரை, இந்த முறை திமுக வெற்றி பெற்றால் அடுத்த முறை அதிமுக என்றே கடந்த 5 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. எனினும் அதிமுகவுக்கு பலமான வேட்பாளராக பிஎச் மனோஜ் பாண்டியன் விளங்கியதாலேயே அவரால் வெற்றி பெற முடிந்தது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றி பெற்று வந்தது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக இருந்த பி எச் பாண்டியன் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்தார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அதிமுகவில் இணைந்த இவர் வழக்கறிஞர் அணி தலைவராக இருந்து வந்தார். இவர் சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளார். 1977 சட்டமன்ற தேர்தல், 1980, 1984, 1989 சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து 4 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வழக்கறிஞரான இவர் எம்பியாகவும் இருந்துள்ளார்.
சட்டப்பேரவை தலைவர்
1985 முதல் 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில், 9 திமுக சட்டமன்ற உறுப்பினர்களை 'சட்ட நகலை எரித்ததைக் காரணம் காட்டி' தகுதி நீக்கம் செய்தார். இதேபோன்று, 1987 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தை விமர்சிக்கும் வகையில் பத்திரிகையில் கேலிசித்திரம் ஆனந்த விகடன் ஆசிரியரான பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பி அவரை கூண்டில் ஏற்றியவர். மன்னிப்பு கேட்க உத்தரவிட்டதற்கு மறுத்ததால் மூன்று மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டவர் பிஎச் பாண்டியன்.
சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதி
இதனால் நெல்லை மாவட்டத்தில் அப்போதில் இருந்தே பி எச் பாண்டியன் மக்களுக்கு பரீட்சையமான நபராக ஆனார். சேரன்மாதேவி அதிமுகவின் கோட்டையாக விளங்கியது என்றே சொல்லலாம். இதனால் அடுத்த தேர்தலில் தன் மகனான பிஎச் மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுத்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பி எச் மனோஜ் பாண்டியன் சேரன்மாதேவியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இவருக்கு இருந்தது.
பூங்கோதையை வீழ்த்தி வெற்றி
ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். எனினும் தற்போது பூங்கோதை அருணாவும் ஆலங்குளம் தொகுதியில் குறிவைத்து தேர்தல் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். இவரது தந்தை ஆலடி அருணா ஆலங்குளம் தொகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்தார்.
கடந்த தேர்தலில் 3,700 வாக்குகளில் தான் அவர் தோல்வி அடைந்தார்.. எனவே அவர் இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இதனால் மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளம் தொகுதி மீண்டும் கிடைக்குமா? அல்லது எம்பி தேர்தலில் வாய்ப்பு என ஏதேனும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
திமுகவுக்கு பெரிய பிளஸ்
கடந்த கால புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது திமுகவை விட அதிமுகவே இந்த தொகுதியில் கொஞ்சம் பலம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் மனோஜ் பாண்டியனுக்கு தனிப்பட்ட முறையில் இந்த பகுதியில் செல்வாக்கு அதிகம் என்பதாலும், அவர் திமுகவில் இணைந்திருப்பதாலும் நிச்சயமாக திமுகவுக்கு இது பெரிய பிளஸ் ஆகவே பார்க்க முடிகின்றது.
அதே சமயம் அதிமுகவிற்கு நெல்லை மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பரீட்சையமான பெரிய பலமாக இருந்த மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் சென்றிருப்பது சற்று பலவீனாகவே பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் அதிமுகவிற்கு பலம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் தென் மாவட்டங்களில் தங்கள் கரத்தை பலப்படுத்த திமுக முயற்சி மேற்கொண்ட நிலையில் தற்போது அதற்கு பலன் கிடைத்ததாகவே மனோஜ் பாண்டியனின் திமுக இணைவு பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த முறை திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜயின் தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவும் என தெரிகிறது. அதிமுகவில் செல்வாக்கு மிக்க பிரமுகராக விளங்கிய மனோஜ் பாண்டியனை திமுக தன்வசம் எடுத்திருப்பதன் மூலம் இந்த தொகுதியில் வாக்கு வங்கி கணிசமாக உயர வாய்ப்புள்ளது.. இதனால் தற்போதைய சூழலில் பார்க்கும் போது திமுகவுக்கு பலம் அதிகரித்துள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக!












Click it and Unblock the Notifications