நிதானமில்லாத மனோவின் இரு மகன்கள்! என் நண்பரை கெட்ட வார்த்தையால் அழைத்து அட்டூழியம்! நண்பர்கள் பேட்டி
சென்னை: பிரபல பாடகர் மனோவின் இரு மகன்கள் உள்பட 6 பேருக்கு எந்த மாதிரியான போதை மருந்தை பயன்படுத்தினார்கள் என்று கூட தெரியவில்லை. அந்தளவுக்கு நிதானமே இல்லாமல் இருந்ததாக மனோ மகன்களால் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மனோ மகனால் தாக்கப்பட்ட நபர்களின் நண்பர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நாங்கள் எல்லாரும் கால்பந்து பயிற்சி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். சரியாக நேற்று இரவு 11.45 மணிக்கு விளையாடி முடித்துவிட்டு 7 பேர் கிளம்பினோம்.

இதனிடையே எங்களுடன் இருந்த கிருபாகரன் என்பவர் சாப்பாடு வாங்க சென்றார். அப்போது மனோவின் இரு மகன்கள் உள்பட மொத்தம் 6 பேர், கிருபாகரனை ஹேய் என்றும் உடன் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியும் அழைத்துள்ளனர்.
உடனே கிருபாகரன் அவர்களிடம் சென்று, "யார் நீங்கள் என்னை ஏன் தகாத வார்த்தைகளால் அழைக்கிறீர்கள்" என கேட்டுள்ளார். உடனே மனோவின் மகன், கிருபாகரனை மார்பில் எட்டி உதைத்ததில் அவர் கீழே விழுந்தார். ஏன் என்னை அடிக்கிறீர்கள் என அவர் மீண்டும் கேட்ட போது அவர்கள் அனைவரும் ஒரு ஆளை போட்டு அத்தனை அடி அடித்துள்ளனர்.
உடனே அந்த கிருபாகரன் எனக்கு போன் செய்தார். நாங்கள் எல்லாம் அந்த இடத்திற்கு போனோம். அங்கு போய் என்ன ஆச்சு, ஏன் அடிக்கிறீர்கள் என கேட்ட போது மனோவின் மகன்கள் உள்பட அனைவரும் எங்களை மாறி மாறி கற்களால் கடுமையாக தாக்கினர்.
எங்களுடன் வந்த 16 வயசு சிறுவனை முட்டி போட வைத்து உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறது. பிறகு 100க்கு போன் செய்தவுடன் காவல் துறை ரோந்து வாகனம் வந்தது. அப்போது கூட எங்களை அசிங்கமாக பேசி அடித்தார்கள். நாங்கள் போலீஸாரிடம் "என்ன சார் உங்கள் முன்னாடியே இப்படி பேசுகிறார்கள். அடிக்கிறார்கள்" என கேட்டதற்கு மனோவின் மகன்கள், உங்களால் எங்களை எதுவுமே செய்ய முடியாது என கூறினர்.
பாதிக்கப்பட்ட எங்களின் செல்போன், வண்டியை போலீஸார் பறிமுதல் செய்து விட்டு அவர்களை அசால்ட்டாக அனுப்பி வைத்துவிட்டனர். அந்த 16 வயது சிறுவன் "என்னை விட்டுடுங்கள் என துடிக்கிறான்" ஆனாலும் அவர்கள் விடாமல் அடித்தனர். எந்த போதையை பயன்படுத்தினார்கள் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. அவர்களில் ஒருவர் கூட நிதானமே இல்லாமல் இருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன?: சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால பந்து பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 5 பேரில் ஒருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோவின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அவருடைய மகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications