வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அலிகான் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். வேலூர் லோக்சபா தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் நாளை அங்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தார். நேற்று பிரசாரத்துக்கு கடைசி நாள் என்பதால் மன்சூர் அலிகான் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். வாணியம்பாடியில் பிரசாரம் செய்த அவர் நேற்று மதியம் குடியாத்தம் நோக்கி சென்றார்.
அந்த சமயத்தில் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மன்சூர் அலிகான், குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான் இன்று காலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தான் குடியாத்தத்தில் பழச்சாறு, மோர் குடித்ததாகவும், அதன்பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் விஷ முறிவு சிகிச்சை எடுத்து கொண்டு குணமாகி வருகிறேன்'' என தெரிவித்து இருந்தார். விஷமுறிவு சிகிச்சை எடுத்து கொண்டதாக அவர் கூறியுள்ளதால் பழச்சாறு அல்லது மோரில் விஷம் கலக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சென்னை மருத்துவமனையில் இருந்து மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் மன்சூர் அலிகான் ஓய்வு எடுக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம்.
இன்னும் சொல்லப்போனால் லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் தான் அவர் இன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி கூறி வெளியே வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications