அது தவறான புரிதல்.. நடிகை திரிஷாவிடம் நான் மன்னிப்பு கோரவில்லை! ட்விஸ்ட் கொடுத்த மன்சூர் அலிகான்
சென்னை: நடிகை திரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இதனை அவர் மறுத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில நடிகை திரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறியுள்ள திரிஷா, இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து x சோஷியல் மீடியாவில் “நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதக்குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று திரிஷா பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சினிமா வட்டத்தை தாண்டி அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார்.
அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தொடர் புகார்களையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின. எனவே ஒரு வழியாக இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், “நான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரவில்லை. மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால் அந்த வார்த்தை மன்னித்துவிடு என புரிந்துக்கொள்ளப்பட்டது. எனவே பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என நானும் அமைதியாக இருந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications