“அவங்க வரலயா?” விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வடிவேலு வராதது பற்றி மன்சூர் அலிகான் சொன்னது என்ன?
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வடிவேலு வராதது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு மன்சூர் அலிகான் பதில் அளித்துள்ளார்.
விஜயகாந்த்தின் மரணத்தால் நொறுங்கிப் போனார் மன்சூர் அலிகான். விஜயகாந்த் இறந்த தகவல் தெரிந்ததுமே, நடந்தே விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார். விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது முதல் அவரது உடல் அருகிலேயே இருந்தார். தேமுதிக அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் உள்ள பெட்டியின் அருகிலேயே இம்மி கூட நகராமல் இருந்தார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து மன்சூர் அலிகான் பேசுகையில், “கேப்டனின் இறப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் சோகமான விஷயம். கடந்த 3 வருடங்களில் கேப்டன் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தார். தனது உடலை அடுத்தவர்கள் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்த மனுஷன் நல்லபடியாக இறைவனடி சேர்ந்ததை பலரும் நல்லது என்றே ஆத்மார்த்தமாக நினைத்திருப்பார்கள்." என்றார்.

மன்சூர் அலிகான் பதில்: வடிவேலுவுக்கு ஆரம்ப காலத்தில் சினிமாவில் நிறைய உதவிகள் செய்த விஜயகாந்த்தின் இறப்புக்கு அவர் அஞ்சலி செலுத்த வராதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், “மன்னிக்கவும், அதெல்லாம் சொல்ல விரும்பவில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள், ரசிகர்களால் விரும்பப்பட்ட மனிதர்.
அரசியல் ரீதியாக எந்தக் கட்சியால் விமர்சிக்கப்பட்டாரோ, அவர்கள் வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவில்லையா? முழு அரசு மரியாதையோடு முதலமைச்சர் உரிய முறையில் மரியாதை செலுத்தவில்லையா? அதை விடுங்கள்” என்றார்.
விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த திரண்ட திரையுலகம்: நடிகர் விஜயகாந்த் ஏராளமான புதிய இயக்குநர்களையும், நடிகர்களையும் திரைத்துறையில் ஆளாக்கி விட்டுள்ளார். நடிகர்கள் மன்சூர் அலிகான், வடிவேலு தொடங்கி ஏராளமானோர், விஜயகாந்த் மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.
நொறுங்கிப் போய்ட்டாரே மனுஷன்! விஜயகாந்த் காலடியிலேயே காலை முதல் தவம் கிடக்கும் மன்சூர் அலிகான்!
ஆனால், விஜயகாந்த் உடன் தனது ஆரம்ப காலம் தொடங்கி, ஏராளமான படங்களில் நடித்துள்ள வடிவேலு, விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனமாக இருக்கிறது. அதேசமயம், விஜயகாந்த் மூலம் சினிமாவில் வளர்ந்த மன்சூர் அலிகான், விஜயகாந்த் உடல் இருந்த பெட்டிக்கு அருகிலேயே இருந்தார்.
இந்நிலையில் தான், வடிவேலு வராதது பற்றி மன்சூரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார். முன்னதாக, வடிவேலு, யார் இறந்தாலும் செல்லமாட்டார் என அவருடன் நீண்டகாலம் பழகி, பல படங்களில் நடித்த சாரப்பாம்பு சுப்புராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications