சுண்டைக்காய்! ரஜினி எப்போதும் பணக்காரர்கள் பக்கம்தான்.. மன்சூர் அலிகான் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் ஒரு சுண்டைக்காய் என மன்சூர் அலிகான் கடுமையாக விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் வெளியீட்டுக்கு ஒரு நாளுக்கு முன்னரே அவர் இமயமலைக்குச் சென்றார். அங்கு பாபா குகையில் 2 மணி நேரம் தியானத்தில் இருந்தார்.

Mansoor Alikhan old video goes trending on Rajinikanth

இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.

அப்போது ரஜினி, யோகியின் காலில் விழுந்தது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. அதிலும் ரஜினியை விட யோகி 21 வயது சிறியவராம். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரஜினியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்தன. நல்லவேளை ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றெல்லாம் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வருடன் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் பார்க்கவிருப்பதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் முதல்வருக்கு பதில் துணை முதல்வர் ஜெயிலர் படம் பார்ப்பார் என சொல்லப்பட்டது. அதன்படி ஜெயிலர் படம் துணை முதல்வருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. அவரும் பாதி படத்திலேயே முக்கியமான வேலை இருப்பதாக கூறி எழுந்து சென்றுவிட்டார்.

இதையும் விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், கமல் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் யோகியின் காலில் விழுந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில் வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் யோகிகள், சந்நியாசிகளை நேரில் சந்திக்கும் போது காலில் விழுந்து வணங்குவது என் பழக்கம். அதைத்தான் நான் செய்தேன் என்றார். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

Mansoor Alikhan old video goes trending on Rajinikanth

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின்போது வெளியான இந்த வீடியோவில் மன்சூர் அலிகானிடம் ரஜினியின் புகைப்படத்தை காண்பித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு மன்சூர் அலிகான் பதிலளிக்கையில் ரஜினி உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். அவரை எனக்கு நடிகராக மிகவும் பிடிக்கும். ஆனால் அவரை அண்மைக்காலமாக சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.

ரஜினி எப்போதும் பணக்காரர்கள் பக்கம்தான் இருப்பார். அரசியலில் அவர் ஒரு சுண்டைக்காய் என பேசியிருந்தார். அந்த வீடியோதான் தற்போது வைரலாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+