சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு.. ஷாக் செய்தி.. பிரபல வங்கிகள் எடுத்த முக்கிய முடிவு! போச்சு
சென்னை: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. ரிசர்வ் வங்கி (RBI) ஜூன் 2025 இல் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி போன்ற முக்கிய வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த வட்டி விகிதக் குறைப்பு 1% ஆக உள்ளது. பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒரே மாதிரியான குறைந்த வட்டி விகிதத்தை அமல்படுத்தியுள்ளன. இது அனைத்து சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களையும் பாதிக்கும்.

எஸ்பிஐ வட்டி விகிதத்தை 2.5% ஆக குறைத்தது
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ, தனது சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2.5% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 15, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, எஸ்பிஐ வங்கி ரூ.10 கோடிக்கும் குறைவான சேமிப்பு தொகைக்கு 2.7% வட்டியும், ரூ.10 கோடிக்கு அதிகமான தொகைக்கு 3% வட்டியும் வழங்கி வந்தது.
HDFC வங்கியும் 2.75% ஆக குறைப்பு
HDFC வங்கியும் தனது சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ஜூன் 10, 2025 முதல் 2.75% ஆக குறைத்துள்ளது. இதற்கு முன்பு, HDFC வங்கி ரூ.50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு தொகைக்கு 2.75% வட்டியும், ரூ.50 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 3.25% வட்டியும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
ICICI வங்கியின் புதிய வட்டி விகிதம்
ICICI வங்கியும் தனது வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2.75% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய விகிதம் ஜூன் 12, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, ICICI வங்கி ரூ.50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு தொகைக்கு 2.75% வட்டியும், அதற்கு அதிகமான தொகைக்கு 3.25% வட்டியும் வழங்கி வந்தது.
பிற வங்கிகளின் வட்டி விகிதங்கள்
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மாற்றத்திற்கு ஏற்ப மற்ற வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. அந்த வங்கிகளின் வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
பாங்க் ஆஃப் பரோடா: 2.7% முதல் 4.25% வரை (ஜூன் 12 முதல் அமல்)
ஃபெடரல் வங்கி: 2.5% முதல் 6.25% வரை (ஜூன் 17 முதல் அமல்)
இண்டஸ்இண்ட் வங்கி: 3% முதல் 5% வரை (ஜூன் 16 முதல் அமல்)
RBL வங்கி: 3% முதல் 6.75% வரை (ஜூன் 16 முதல் அமல்)
வங்கிகள் டெபாசிட் மீதான வருவாயை குறைத்து, நிலையான வைப்பு (FD) விகிதங்களையும் குறைத்துள்ளன. இது ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட மாற்றமாகும்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளதால், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் முதலீட்டு முடிவுகளை கவனமாக ஆராய்ந்து எடுப்பது நல்லது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications