முஸ்லீம் என்பதால் வாய்ப்பு மறுப்பு? ஏஆர் ரஹ்மான் கருத்தால் வெடித்த சர்ச்சை! திரளும் பாலிவுட்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் சினிமாவில் பாகுபாடு இருப்பதாகச் சொல்லி இருந்தார். இது தொடர்பாக அவருடைய கருத்துகள் மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்களும் ரஹ்மானை விமர்சித்து வருகிறார்கள். ரஹ்மான் சொன்னதில் உண்மை இல்லை என்று சொல்லி வருகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது தென்னிந்தியா படங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் பிபிசி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் கூறிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்தது. அதாவது கடந்த 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் தனக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என அவர் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
மேலும், பாலிவுட்டில் தமிழ் கலைஞர்களுக்கு எதிராகப் பாகுபாடு உள்ளதா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். தனிப்பட்ட முறையில் தாம் பாகுபாட்டை உணர்ந்ததில்லை என்றும், ஆனால் தனது கவனத்திற்கு அப்பாற்பட்ட எதாவது நடந்திருக்கலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இப்போது இந்தி சினிமாவில் அதிகாரம், கலைப் பார்வை கொண்டவர்களிடமிருந்து விலகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். அதேபோல தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க மதம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்பது போல கூறியிருந்தார்.
பாகுபாடு குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கருத்துகள் மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதற்குப் பாலிவுட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளனர். பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுன கங்கனா ரணாவத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், ரஹ்மானை "பாகுபாடு கொண்டவர் மற்றும் வெறுப்பு நிறைந்தவர்" என்று விமர்சித்த அவர், தனது 'எமர்ஜென்சி' படத்திற்கு இசையமைக்கவும் அது தொடர்பாகத் தன்னை சந்திக்கக் கூட ரஹ்மான் மறுத்துவிட்டார் என்றும் சாடினார்.
கங்கனா
இது தொடர்பாக அவர் மேலும், "அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நான் பாஜகவை ஆதரிப்பதால் திரைப்படத் துறையில் நிறையப் பாகுபாட்டை எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட பாகுபாடு கொண்ட மற்றும் வெறுப்பு நிறைந்த மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும். எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தை உங்களுக்கு விவரிக்க ஆர்வமாக இருந்தேன். கதை சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் என்னைச் சந்திக்கக் கூட மறுத்துவிட்டீர்கள். பிரச்சாரப் படத்தில் இணைந்து பணியாற்ற அவர் விரும்பவில்லை என என்னிடம் சொன்னார்கள்.
அதேநேரம் எனது 'எமர்ஜென்சி' திரைப்படம் விமர்சகர்களாலும் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் "சமச்சீரான" அணுகுமுறைக்காகப் பாராட்டப்பட்டு, "தலைசிறந்த படைப்பு" என்று அழைக்கப்பட்டது. ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். இதற்காக நான் வருந்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஷோபா
அதேபோல பிரபல நாவலாசிரியரான ஷோபா தேவும், ரஹ்மான் கருத்தை "ஆபத்தானது" என்று விமர்சித்தார். இது குறித்து அவர், "இது மிகவும் ஆபத்தான கருத்து. அவர் ஏன் இப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த 50 ஆண்டுகளாகப் பாலிவுட்டை கவனித்து வருகிறேன், சமூக பாகுபாடு இல்லாத ஒரு இடம் என்றால் அது பாலிவுட் தான். உங்களிடம் திறமை இருந்தால், உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.. திறமை இல்லையென்றால் வேலை கிடைக்காது. மதம் இதற்குக் காரணம் இல்லை.. அவர் மிகப் பெரிய வெற்றிகரமான மற்றும் முதிர்ச்சியடைந்த மனிதர். அவர் இதுபோல பேசியிருக்கக் கூடாது" என்றார்.
ஜாவேத் அக்தர்
எழுத்தாளர் ஜாவேத் அக்தரும் ரஹ்மான் கருத்தை மறுத்துள்ளார். சினிமாவில் ரஹ்மானுக்கு மிகப் பெரிய மரியாதை இருப்பதாகவும் அவரது அந்தஸ்து காரணமாகவே பலர் அவரை அணுகத் தயங்குவதாகவும் ஜாவேத் தெரிவித்தார். அவர் மேலும், "ரஹ்மான் சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.. மேலும் அவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
ரஹ்மான் ஒரு சிறந்த இசையமைப்பாளர், பலரும் அவரை மதிக்கிறார்கள். ஆனால் அவர் மிகவும் பெரியவர் என்பதால் அவரை அணுகி தங்கள் படத்திற்கு இசையமைக்கச் சொல்லிக் கேட்கப் பலரும் யோசிக்கிறார்கள். அவரிடம் பேசப் பயப்படுகிறார்கள். அதுவே சிக்கலுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.
பாடகர் ஷான்
பாலிவுட் பாடகர் ஷானும் மத பாகுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "பல ஆண்டுகளாக நான் தொடர்ச்சியாகப் பாடி வருகிறேன். ஆனால், எனக்குமே சில சமயங்களில் வேலை கிடைப்பதில்லை. ஆனால் நான் அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதில்லை. ரஹ்மான் ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டவர், அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இசையில் எந்த மத பாகுபாடும் இருப்பது இருப்பதாக நான் நினைக்கவில்லை. இசைத் துறை அப்படி இயங்குவதில்லை" என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications