மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நெல்லை.. பல வேட்பாளர்கள் வேட்புமனு அதிரடி டிஸ்மிஸ்.. இதோ லிஸ்ட்
சென்னை: உச்ச கட்ட பரபரப்பில் இருக்கிறது தமிழக அரசியல். வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெறும் நிலையில் சில தொகுதிகளில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சில தொகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரி முன்னிலையில் தர்ணா நடத்தி, காவல்துறை உதவியுடன் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியது என பல அதிரடிகளால் பரபரத்து கிடக்கிறது தமிழக அரசியல்.
அதிலும் சிலரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள காரணம் மிகவும் வியப்பாக இருக்கிறது. மெத்த படித்த வேட்பாளர்கள் கூட ஒரு வேட்பு மனுவை சரியாக நிரப்பி தாக்கல் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறார்களா, என்ற சந்தேகங்களை எழுப்புவதாக இருக்கின்றன.

மேட்டுப்பாளையம் தொகுதி
இப்படித்தான், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ராஜ்குமார் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பு படிவம் இரண்டு முறையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் வேட்பு படிவத்தை, தேர்தல் நடத்தும் அதிகாரி குமரேசன் தள்ளுபடி செய்தார். அரசியல் கட்சியினர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் நிரப்பப்படவில்லையாம்.

நெல்லை தொகுதி
நெல்லையில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்பு படிவம் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. 10 பேர் முன்மொழிய வேண்டிய இடத்தில் 8 பேர்தான் முன்மொழிந்து இருந்தனர். இதையடுத்து அழகேசன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமமுக வேட்பாளர்
அதே, நெல்லை தொகுதியில், அமமுக வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பு படிவத்தை முன்மொழிந்த 10 பேரில் மூன்று பேர் அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மாற்று வேட்பாளர் மகேஷ் கண்ணன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பேராசிரியை சபரிமாலா சுயேட்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டது. இவர் பெண்ணியவாதி. பெண்கள் பிரச்சினைகள் தொடர்பாக போராட்டங்களை நடத்தி வந்தவர். இதுதவிர பல முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications