8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 15 ரயில்கள் ரத்து.. திருவள்ளூர் ரயில் தீவிபத்து எதிரொலி.. முழு விவரம்
சென்னை: திருவள்ளூரில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரயில் சேவை மொத்தமாக முடங்கியுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து காரணமாக விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை, பெங்களூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை மணலியில் இருந்து டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக உராய்வு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் தீ ஒரு வேகனில் பரவிய நிலையில், பிறகு மெல்ல மற்ற வேகன்களுக்கும் பரவியிருக்கிறது. இதனால் அங்குப் பல மீட்டர் தூரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

ரயில் விபத்து
அந்த ரயிலில் மொத்தம் 52 வேகன்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது, அதில் இப்போது வரை 4 வேகன்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. மற்ற வேகன்களில் தீ பரவுவதைத் தடுக்க அவை தனியாகப் பிரிக்கப்பட்டன. டீசல் காரணமாக ஏற்பட்ட தீவிபத்து என்பதால் தண்ணீருக்குப் பதிலாகச் சிறப்பு நுரை (foam) மூலம் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல ரயில்கள் ரத்து
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வருகிறது. இதனால் அங்கு ரயில்பாதையில் உள்ள ஒயர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் திருவள்ளூர் வரை ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications