'கருணாநிதியின் அன்பை பெற்ற பண்பாளர்..' இல கணேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல கணேசன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து, 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வென்றது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டசபையில் பாஜக நுழைந்தது.
இதையடுத்து பாஜக தமிழக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதேபோல கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார்.

மணிப்பூர் ஆளுநர்
அதேநேரம் பல ஆண்டுகளாக பாஜகவிற்காக உழைத்த மூத்த தலைவர்களுக்கு முக்கிய பதவி எதுவும் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான இல கணேசன் தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார். சண்முகநாதன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறகு தமிழக பாஜகவில் இருந்த ஆளுநராக அறிவிக்கப்பட்ட 3ஆவது நபர் இல கணேசன் ஆவர். இவர் கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வாழ்த்து
இந்நிலையில் மணிப்பூர் ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள இல கணேசனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இல கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல தமிழ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மணிப்பூர் மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், "மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றும் அண்ணன், இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்" என்று தனது டவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

வைரமுத்து
அதேபோல இல கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து, "இலக்கிய கணேசனாக அறியப்பட்ட இல.கணேசன் இன்று மணிப்பூர் ஆளுநராக அறியப்படுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழறிந்த ஒருவர் பெருமை பெறுவது பெருமிதம் தானே வாழ்த்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, "மூத்த தலைவர் இல. கணேசன் ஐயா மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.சிறந்த தேசியவாதியும் ஆன்மீக வாதியும் ஆன ஐயா அவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டிருப்பது 8 கோடி தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாக நான் கருதுகிறேன். அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹெச் ராஜா
பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான ஹெச் ராஜா, "மூத்த தலைவர் இல.கணேசன் ஜி அவர்கள் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இல.கணேசன் ஜி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications