பார்டரை தாண்டி வரக்கூடாது.. சென்னை வானிலையில் ஏற்பட்ட கடும் மாற்றம்.. வல்லுனர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வானிலை இன்று எப்படி இருக்கும், வெயில் எந்த அளவிற்கு இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Many parts of Chennai is brewing in heat: What is the actual temperature in Tamil Nadu?

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

அதே சமயம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை பெய்யாது

ஆனால் மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும், சென்னையில் இன்று மழை பெய்யாது. மேலே குறிப்பிட்டப்படி லேசான சாரல் மழையை தவிர்த்து சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றில் இருந்து கடுமையான வெயில் அடிக்கும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வானிலை இன்று எப்படி இருக்கும், வெயில் எந்த அளவிற்கு இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

சென்னை ரெயின்ஸ் அமைப்பு செய்துள்ள போஸ்டில், வடக்கு தமிழ்நாட்டில் இன்று பகல் நேரங்களில் வெயில் அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் மேற்கு நகர பகுதிகளிலும் வெயில் அதிகரிக்கும். அந்த பகுதிகளில் 40 முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவும்.

கடல் காற்றின் வலிமையை பொறுத்து இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் எப்போதும் போல மழை தொடரும்.

சென்னையில் 40 டிகிரி செல்ஸியஸ் வரை நேற்று வெப்பநிலை நிலவியது. 46 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை உணரப்பட்டு உள்ளது.

நுங்கம்பாக்கத்திற்கும், அண்ணா நகருக்கும் வர வேண்டிய கடல் காற்று இன்று வரவில்லை. வடிவேலு போல இந்த பார்டரை தாண்டி வரக் கூடாது என்று முடிவு செய்து கடல் காற்று வரவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையின் மேற்கு பகுதிகளில் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் வெப்பம் குறைந்து உள்ளது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

அதிகரிக்கும் வெப்பம்:

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+