தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்..? வானிலை மையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
அரபிக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் மேற்கு தமிழ்நாட்டிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டது.
கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக முல்லைப்பெரியாறு அணை நிரம்பி வருகிறது. இதனால் வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதேபோல் மேற்கு மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

மழை
இந்த நிலையில்தான் இன்றில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை தீவிரம் எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற காலநிலை உருவாகி வருவதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

அடுத்த 4 நாட்கள்
இதனால் இன்றில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 8 மாவட்டம்
அதன்படி இன்று கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மதுரை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும்.

டெல்டா
டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை நாளை முதல் பெய்யும் என்று வானிலை மையம் கணித்து உள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் மழை தீவிரமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications