நிவர் புயல் வருகிறது.. இங்குதான் மழை பெய்யும்.. அதுவும் அதிதீவிர கனமழை..வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை
சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நிவர் புயல் நெருங்கி வருகிறது. தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. வங்க கடலுக்கு அருகே தற்போது நிலை கொண்டு இருக்கும் நிவர் புயல் சென்னையில் இருந்து 300 கிமீ தூரத்தில் உள்ளது.
இந்த நிலையில் நிவர் புயல் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில் தமிழகம் முழுக்க பல்வேறு கடலோர மாவட்டங்கள் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த புயல் காரணமாக எங்கெல்லாம் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கண்டித்துள்ளார்.

எங்கு
தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில், நிவர் புயல் காரணமாக 26ம் தேதி வரை நல்ல மழை பெய்யும். கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூரில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள்ளே பெய்யும்
தமிழகத்தின் உட்பகுதிகளில் 26ம் தேதி மழை பெய்யும். கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும். இந்த மாவட்டங்களில் எங்கு அதிக அளவில் மழை பெய்யும் என்பதை கணிக்க முடியாது. புயலை பொறுத்து எங்கு வேண்டுமானாலும் தீவிரமான கனமழை பெய்யும்.

நல்ல மழை
புயல் தமிழகத்தை நெருங்கும் போது நல்ல மழை பெய்யும். விடாமல் சில மணி நேரங்களுக்கு மழை பெய்யும். புயல் கரையை கடக்கும் போது சென்னையில் நல்ல மழை இருக்கும். புயலின் மையம் மேலே இருக்கும் பகுதிகளை கடக்கும் போது தீவிர கனமழை பெய்யும். கடலூரில் இருந்து நெல்லூர் வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
Recommended Video

கடலுக்கு செல்ல வேண்டாம்
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையை கடக்கும் போது கடலுக்கு அருகில் கூட செல்ல வேண்டாம். புயலும் கடல் அலையும் உங்களை தூக்கி செல்ல வாய்ப்பு உள்ளது., என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications