இன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை பெய்து வருகிறது.
போஸ்ட்
இந்த நிலையில் தமிழக வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். அதில், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்.

வேறு மாநிலம்
அதேபோல் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா பகுதிகள், கடலூர் மற்றும் கடலோர பகுதியில் இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை எப்படி
சென்னையில் இன்று இரவுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை காலை வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுவாக பகலை விட இரவு நேரத்தில்தான் அதிகமாக மழை பெய்யும்.

தண்ணீர் அளவு
சென்ற வருடத்தை விட சென்னையில் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளது. கேரளாவில் இன்று நன்றாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, ஆலப்புழாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications