தமிழகத்தின் மூத்த தலைவர்.. டாக்டர் ராமதாசுக்கு இன்று பிறந்தநாள்.. எடப்பாடியார், ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின்இன்று தனது 81வது பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரசியல்பாகுபாடு இல்லாமல், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ராமதாசுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமதாசை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து
பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று 81வது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தொலைபேசியில் ராமதாசை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறகு, டுவிட்டர் பக்கத்தில், கூறுகையில், இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் திரு ச.இராமதாசு அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெதரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து
பாமக மற்றும் அதிமுக ஆகியவை கூட்டணி கட்சிகள். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின், தலைவர் ஸ்டாலினும், ராமதாசுக்கு வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் கூறியுள்ளார். ஸ்டாலின் கூறுகையில், இன்று 81 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன். உடலும் உள்ளமும், நலமும் திடமும் கொண்டு நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்! இவ்வாறு கூறியுள்ளார்.

நலத்திட்ட உதவிகள்
ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு லாஸ்பேட்டை தொகுதி பாமக இளைஞர் அணி சார்பில் மதிய உணவு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வடக்கு பகுதி மாநில இளைஞரணி துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மண்டல செயலாளர் சிவா கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவினை வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications