மொத்தமாக காலியாகும் கூடாரம்?.. சைட் கேப்பில் அமமுகவை வெலவெலக்க வைத்த திமுக.. அசரடித்த அன்பரசன்!
சென்னை: சென்னையில் அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் மொத்தமாக திமுகவில் இணைந்துள்ளனர். ஒரு காலத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்து பின் அமமுகவிற்கு வந்தவர்கள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.
அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுக வரிசையாக தட்டி தூக்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வரிசையாக பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திமுக பக்கம் தாவி வருகிறார்கள்.
முக்கியமாக கொங்கு மண்டலத்தில் நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்துவிட்டனர். ஈரோடு, கரூர், கோவை என்று மேற்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் கடந்த ஒரு மாதமாக இணைந்து வருகிறார்கள்.

அமமுக
இவ்வளவு நாட்கள் அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வந்த திமுக தற்போது அமமுக நிர்வாகிகளையும் கொக்கி போட்டு தூக்கி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு பின் அமமுக மொத்தமாக சைலன்ட் ஆகிவிட்டது. டிடிவி தினகரனும் பெரிதாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை. சசிகலாவும் அமமுகவை கண்டுகொள்வது இல்லை.

சசிகலா
சசிகலா அமமுகவே வேண்டாம், அதிமுகவை மீட்பதுதான் முக்கியம் என்று தீர்க்கமாக இருக்கிறார். இதனால் நம்பிக்கை இழந்த அமமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய தொடங்கி உள்ளனர். அதன் ஒரு படியாக சென்னையில் அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அமமுக பொதுக்குழு உறுப்பினர் டி.ரவி, மாவட்ட மகளிர் அ.செ விஜயலட்சுமி ஆகிய மூவரும் இன்று திமுகவில் இணைந்தனர்.

முக்கிய தலைவர்
அமமுக பொதுக்குழு உறுப்பினர் டி.ரவி சென்னையில் அமமுகவின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்பட்டவர். முக்கியமாக டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக பார்க்கப்பட்டவர். இந்த நிலையில் திடீரென திமுகவில் அவர் இணைந்துள்ளார். அதோடு மொத்தமாக அமமுக கூடாரத்தை காலி செய்யும் வகையில் கிட்டத்தட்ட 200 நிர்வாகிகள் அப்படியே திமுக பக்கம் அமமுகவில் இருந்து தாவி உள்ளனர்.

அன்பரசன்
இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவிற்கு வந்த அடிப்படை தொண்டர்கள். கிராமப்புற தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன் அமமுக நிர்வாகிகள் பலருடன் பேசி வருவதாக முன்பே செய்திகள் வெளியானது. அமமுக நிர்வாகிகள் பலர் அன்பரசன் மூலம் திமுகவிற்கு வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்தன. அதன்படியே அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இன்று அமமுக நிர்வாகிகள் மொத்தமாக இணைந்துள்ளனர்.

சைட் கேப்
இவ்வளவு நாட்கள் அதிமுகவில் இருந்துதான் வரிசையாக நிர்வாகிகள் திமுகவிற்கு வந்தனர். ஆனால் தற்போது சைட் கேப்பில் அமமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளை திமுக தட்டி தூக்கி உள்ளது. நகராட்சி, மாநகராட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தொடர்ந்து மாற்று கட்சி நிர்வாகிகள் திமுக பக்கம் தாவுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications