தாம்பரம் ரூட்ல பயணிக்கிறீங்களா.. ரயில் பயணிகளே உடனே நோட் பண்ணுங்க.. இன்று முதல் மேஜர் மாற்றம்!
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இதன் காரணமாக, தாம்பரம் வழியாக வரும் தென் மாவட்ட ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரயில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக எழும்பூர் வரை இயக்கப்படுகின்றன.

இதனால் தாம்பரம் ரயில் நிலையம் என்பது முக்கிய முனையமாக உள்ளது. இந்த நிலையில் தான் தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை தாம்பரம் வழியாக வரும் ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களின் சேவைதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:-
* நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப் படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் - எழும்பூர் இடையே புறநகர் ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக எழும்பூருக்கு செல்லும்.
* திருச்செந்தூரில் இருந்து செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். ஆகஸ்ட் 17 ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் என மாற்று வழியில் எழும்பூருக்கு செல்லும்.
* நெல்லை, பொதிகை, அனந்தபுரி, பாண்டியன், முத்துநகர், சிலம்பு உள்ளிட்ட விரைவு ரயில்கள் தாம்பரம் சிக்னல் பணிகள் முடிவடையும் வரை 20 முதல் 30 நிமிடங்கள் வரை புறநகர் பகுதியில் தாமதமாக இயக்கப்படும்.
* தினமும் இரவு 11 மணிக்கு புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரயில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும். நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.20684) ரயில் 24,26,27,29,31- ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்படும்.
* மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், 24, 25, 28, 30 ஆம் தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயிலானது ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும்
* தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் ஜூலை 24, 28, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
* மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் ரயில், இன்று மற்றும் வரும் 25, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்திற்கு பதில் எழும்பூரில் நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications