Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விட்டுறாதீங்க".. தூக்கியடிக்கப்பட்ட ஆபீசர்ஸ்.. கலங்கடிக்கும் "மரக்காணம்" கள்ளச்சாராய உயிர்ப்பலிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அடுத்தடுத்த அதிரடிகள் நடந்து வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Marakkanam incident and tamil nadu three IPS officers transferred by home department principal secretary

நிவாரணம்: இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. விசாரணையில், புதுவையில் இருந்து கடத்தப்பட்டு வந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களை கைது செய்தனர். இதனால் குறைந்த விலைக்கு மது கிடைக்காததால், எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. எத்தனால் மற்றும் மெத்தனால் கலவை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடியவை என்றும் தெரியவந்தது

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

ஆறுதல்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும், இதனை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்..

அத்துடன், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது..

அட்வைஸ்: அப்போது, மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

Marakkanam incident and tamil nadu three IPS officers transferred by home department principal secretary

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்குபிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள் மாற்றம்: இதனிடையே, ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் எஸ்பியாக உள்ள எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக செங்கல்பட்டு மாவட்ட (பொறுப்பு) எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ், கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு டி.ஐ.ஜி. யாக உள்ள ஜியா உல்ஹக் விழுப்புரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொருபுறம், தமிழ்நாடு முழுக்க சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டிஜிபி தகவல்: இது குறித்து காவல்துறை அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கள்ளச்சாராய உயிர்பலி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மாநில அரசை தொடர்ந்து விமர்சித்து வருவது, பரபரப்பை கிளப்பி வருகின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+