மார்கழி பிறந்தாச்சு.. அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம்.. பஜனை பாடி பக்தி பரவசம்
சென்னை: மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் காலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகின்றது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு காலையிலேயே பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு, கோயில் முன்பு பஜனை பாடி, ஆடி மகிழ்ந்தனர்.
மார்கழி மாதம் பிறந்துள்ளது. வழிபாட்டுக்கு உகந்த நாளாக மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து பெண்கள் வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு வழிபடுவார்கள். ஆண்கள் பஜனை பாடி வழிபடுவார்கள்.

குறிப்பாக திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாடு செய்வார்கள். மார்கழி மாதம் என்றா முன்பனிக்காலம் என்பதால் குளிர் அதிகமாக இருக்கும். இந்த குளிரிலும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு கோயில்களில் பஜனை செய்து ஆடி பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
பெருமாள், சிவனை வழிபடுவார்கள். மார்கழி மாதத்தின் 30 நாட்களுமே சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 108 திவ்ய தேச தலங்களில் முதன்மையானதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அம்மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டும் இன்றி தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.

இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் காலையிலேயே திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். காலையிலேயே கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு, கோயில் முன்பு பஜனை பாடி, ஆடி மகிழ்ந்தனர். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களும் காலையிலேயே கோயில்களில் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications