எதுக்கு Bison படம்? யாரு சாதி பாருக்குறா? மாரி செல்வராஜிடம் கேள்வி! பதில் நச்சுன்னு இருக்கே!
சென்னை: பைசன் திரைப்படம் குறித்த விவாதங்கள் பரவலாக எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம் "இப்போ எல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்? 1960களில் நடந்த சம்பவம் எதற்காக இப்போது திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு மாரி செல்வராஜ் கொடுத்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
துருவ் விக்ரம், பசுபதி, அமீர் உள்ளிட்டோர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் பைசன். தென் மாவட்டங்களில் உள்ள சாதி ஆணவம் எப்படி இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்கிறது என்பதும், அதை மீறி ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதும்தான் கதையின் மையமாக இருக்கிறது. இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று திரைப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்திருந்தனர். சந்திப்பில் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். குறிப்பாக, "இப்போ எல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்? 1960களில் நடந்த சம்பவம் எதற்காக இப்போது திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு மாரி செல்வராஜ் பதிலளித்ததாவது, "வலியை அனுபவிச்ச ஒருத்தனை, அதை வெளியில் சொல்லக்கூடாதுன்னு எப்படி தடுக்க முடியும்? நெகட்டிவ் செட் பண்ணாதீங்க. ஒரு வெற்றியாளர் தன்னுடைய கதையை சொல்கிறார் எனில், அதை சொல்ல வேண்டாம் என்று சொல்வீர்களா? என்னை மட்டும் எப்படி தடுக்கிறீர்கள்? இது என்னுடைய சுதந்திரம். எதை சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். கதை வேண்டாம், வேண்டும் என்று சொல்ல சென்சார் போர்டு இருக்கிறதே!
ஒவ்வொரு தனி மனுஷனையும் திருப்தி படுத்த முடியாது. என்னை பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதையை சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. படைப்பு சுதந்திரத்தை தடுக்க தனி மனிதர்களுக்கு அனுமதி இல்லை. உங்க வாழ்க்கை வேற, என் வாழ்க்கை வேற. நீங்க உங்க வாழ்க்கைய வச்சு இதை பார்க்க கூடாது. ஒட்டுமொத்த தமிழ் சமூகம் என்னை கொண்டாடிட்டு இருக்கு. நீங்க திருப்பி, திருப்பி ஒரு 10 பேர் எங்கயாவது உட்கார்ந்து நெகட்டிவா செட் பண்ண பா்கறீங்க" என்று பேசியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications