டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பிய மாரிமுத்து.. திடீரென மயக்கம்.. நடந்தது என்ன..திருச்செல்வம் கண்ணீர்
சென்னை: டப்பிங் பேசிவிட்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மரணம் குறித்து இயக்குநர் திருச்செல்வம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். இவர் இந்த சீரியலில் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார்.

இவரது நடிப்பு இந்த சீரியலை எங்கோ கொண்டு சேர்த்தது என கூறலாம். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில் நடிகர் மாரிமுத்து இறந்தது எல்லாருக்கும் மிகப் பெரிய இழப்பு.
நாங்கள் இன்று ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக சொன்னார். ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. இது எங்களுக்கு மட்டுமல்ல திரையுலகிற்கே ஒட்டுமொத்த இழப்பாகும்.
அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் எல்லாரும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம், ஆனால் அவர் நன்றாக இருந்தார். இவ்வாறு திருச்செல்வம் தெரிவித்துள்ளார. மாரிமுத்துவுக்கு 56 வயதாகிறது. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார்.
கோபத்தில் அவர் பேசும் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கும். அவருடைய உடல் மொழியே மொத்த டயலாக்கையும் பேசும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இவர் இயக்குநரும் கூட. பூவே உனக்காக, ஆசை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.
இவர் இந்த சீரியலில் பேசும் ஏய் இந்தாம்மா எனும் டயலாக மிகவும் பிரபலம். பெண்ணடிமைத்தனம் செய்யும் இவரது இந்த கேரக்டரை பார்த்தாலே எந்த பெண்ணும் இது போல் ஒரு கணவர் வரக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வில்லன்களிலேயே கொடூரமான வில்லனாக விளங்கினார் ஆதி குணசேகரன். இந்த இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்கிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications