ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்ட மகன்! சினிமாவே வேண்டாம் என்று எம்.பி.ஏ. படிக்க வைத்த மாரிமுத்து!
சென்னை: குணசித்திர நடிகர் மாரிமுத்து காலமானார் என்ற செய்தி தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கோடான கோடி குடும்பங்களுக்கு பரிச்சயமானவர் மாரிமுத்து. இவரது பேச்சும், உடல் மொழியும் அவருக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

சினிமாத்துறையில் 30 ஆண்டுகாலம் பயணித்து கிடைக்காத பெயரும், புகழும் எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் அவருக்கு கிடைத்தது. திரைப்படங்களை இயக்கிவிட்டு, நடித்துவிட்டு, தொலைக்காட்சி தொடர்களின் நடிப்பதா என்ற கேள்வியுடன் தான் இயக்குநர் திருச்செல்வத்திடம் கதைக் கேட்கச் சென்றிருக்கிறார் மாரிமுத்து.
இயக்குநர் திருச்செல்வம் கூறிய கதையையும், கதாபாத்திரங்களையும் கேட்டு அந்த இடத்திலேயே எதிர்நீச்சல் தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு வந்தார் மாரிமுத்து. தன்னைப் போல் தனது மகன் சினிமா துறையில் கஷ்டப்படக் கூடாது என்பதால் அவரை அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவிடவில்லை.

ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மகன் ஆசைப்பட்ட போது அவரை அழைத்துப் பேசி, கோவைக்கு அனுப்பி பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க வைத்தார். இப்போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்தில் மாரிமுத்துவின் மகன் பணியாற்றி வருகிறார். மகனுக்கு திருமணம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்ட நிலையில் தான் எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவியுள்ளார்.
கலைஞர்களுக்கு ஏது மரணம் என்பது போல் காலத்தால் அழியாத சுவடுகளை திரைப்பயணத்தில் விட்டுச் சென்றிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications