நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள்! போலீஸை தப்பா பேசினேனா? சந்திரமோகனை கோர்த்துவிட்ட மெரினா பெண்
சென்னை: ஆண் நண்பருடன் சென்னை மெரினாவில் தகராறில் ஈடுபட்ட பெண் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவருடன் இருந்த ஆண் நண்பர் சந்திரமோகன்தான் போலீஸை தவறாக பேசியதாக தனலட்சுமி தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், கடந்த 20-ம் தேதி இரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக இருவர் காருடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த போலீஸார் சிலம்பரசன் அவர்களை வீட்டிற்கு கிளம்புமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அந்த இருவரும் போலீசாரை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மிரட்டியுள்ளனர். மேலும் உதயநிதியை வரச்சொல்லட்டுமா என்றெல்லாம் கேட்டனர்.
இது தொடர்பாக போலீசார் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 21 ம் தேதி அவர்கள் இருவர் மீதும் மைலாப்பூர் காவல்துறை ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தனலட்சுமி என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன்னுடன் இருந்த ஆண் நண்பர் சந்திரமோகன் தான் காவல்துறையுடன் தகராறு செய்ததாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் இது தொடர்பாக மன்னிப்பு கோரியிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கெளரவமான குடும்ப பின்னணியை கொண்டவர் என்றும் காவல்துறை தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, ஜாமீன் கோரிய நபரும் அவரின் ஆண் நண்பரும் கைது செய்து 3 நாட்கள் தான் ஆகி இருப்பதாகவும், வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் சந்திரமோகன், தான் போதையில் தவறாக பேசிவிட்டேன் , தன்னை மன்னித்து விடுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications