"அசரடிக்கும் பிளான்".. ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு! மெரினாவில் வரும் சாட்டிலைட் பீச்.. குட்நியூஸ்
இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச்.
சென்னை: சென்னையில் மெரினா தொடங்கி கோவளம் வரை நல்ல போக்குவரத்து வசதியையும், பல புதிய சுற்றுலா வசதிகளையும் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரீனாவை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. முக்கியமாக இங்கே பல புதிய சுற்றுலா அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன, சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.
இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மெரினா
கண்ணகி சிலை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதி, உழைப்பாளர், காந்தி சிலை என்று பல சிலைகள், நீர் ஊற்று, அலங்கார கற்கள், சிறிய கூட்டம் நடத்தும் மேடைகள் என்று பல அமைப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இது போக சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே புதிய சுற்றுலா தலங்களை அமைப்பது, வாட்டர் விளையாட்டுகளை ஏற்படுத்துவது, மீனவர்களுக்காக ஜெட் போட்டுகளை வழங்குவது. புதிய பூங்காக்களை ஏற்படுத்துவது. அதேபோல் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சாட்டிலைட் பீச்
இந்த நிலையில்தான் சென்னையில் சாட்டிலைட் பீச் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மெரினா பேச்சில் இணைப்பு சாலை பகுதியில் இருக்கும் பயன்படுத்தப்படாத பகுதிகளை தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி கழகம் சுத்தம் செய்து வருகிறது. இங்கே இருக்கும் குப்பைகளை அகற்றி, பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் பகுதிகளை புனரமைத்து வருகிறது. அதாவது நொச்சி குப்பம், டோம்மிங் குப்பம் பகுதியில் இருக்கும் மெரினாவில் வடக்கு பகுதியைத்தான் சுத்தம் செய்து வருகின்றனர். மெரினா மெயின் கடற்கரைக்கு கொடுக்கப்படும் கவனிப்பு முன்பெல்லாம் இந்த பகுதிக்கு கொடுக்கப்படாமல் இருந்தது.

மோசமான நிலை
இதனால் இந்த பகுதி மக்கள் பயன்படுத்தப்பட முடியாத அளவிற்கு மோசமான நிலையங்கள் கான்கிரீட் நடைபாதை முழுக்க மண் சேர்ந்து வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த இடம்தான் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு இங்கே வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பகுதியைத்தான் துணை பீச்.. அதாவது சாட்டிலைட் பீச் என்று அழைக்க உள்ளனர். மெரினா பீச் பகுதியில் இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த இந்த பீச் அனைவரும் பயன்படுத்தும் வகையில் சாட்டிலைட் பீச்சாக உருவெடுக்க உள்ளது.

பணிகள்
இதற்கான பணிகள் அனைத்தும் தற்போது அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்கரையை சுத்தம் செய்யும் கருவிகள் உதவியுடன் பீச் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நொச்சி குப்பம், டொம்மிங் குப்பம் இடையே இந்த பகுதி உள்ளது. இன்னொரு பக்கம் மெரினா தொடங்கி கோவளம் வரை நல்ல போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் மொத்தம் 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பாரம்பரியம் கட்டிடங்களை மெருகேற்றுவது, உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துவது, சுற்றுச்சூழல் மையம் அமைப்பது, கலை மற்றும் நீர் விளையாட்டுகளை அமைப்பது போன்ற பணிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளை களமிறக்கி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதில் இறுதி முடிவுகளை சென்னை சிஎம்டிஏ எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications