134 அடி உயரம்.. நடுக்கடலில் கார்டன்.. கண்ணாடி பாலம்.. மெரினாவில் கட்டப்படும் கருணாநிதியின் பேனா!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை மெரினாவில் சிலையாக அமைக்க உள்ளனர். கடலில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் வசனங்கள், கதைகள், கவிதைகள், அவரின் எழுத்துக்களை புகழும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது

உலகத்தரம்
இதற்கான கட்டுமானத்தை உலகத்தரத்தில் கட்ட இருக்கிறார்கள். இந்த பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருவள்ளூவர் சிலை 133 அடி உயரம் கொண்டது. இதைவிட 1 அடி உயரத்தில் பேனா சிலையை வைக்க உள்ளனர். இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள். அதாவது நடுவில் மட்டும் பேனா இருக்கும்.

இந்த பேனா சிலை
அதை சுற்றி தளம் அமைக்கப்பட்டு அதில் கார்டன் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் மக்கள் பேனாவை தொட முடியாது. ஆனால் மெரினாவில் கடலில் இப்படி ஒரு அழகிய அமைப்பை ஏற்படுத்துவது சுற்றுலா துறையை மேம்படுத்தும் என்று கூறுகிறார்கள். கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.

மெரினா
நேராக சமாதியில் இருந்தே செல்லும் வகையில் இங்கு நீண்ட பாலம் கட்டப்பட உள்ளது. கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று மக்கள் சிலையை ரசிக்கும்படி இந்த கட்டுமானம் செய்யப்பட உள்ளது. கடலில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படும். 7 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த பாலம் இருக்கும். மொத்தமாக இதற்கு 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.
Recommended Video

எப்படி செல்வார்கள்?
இதற்கு சிஆர்இசட் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு இந்த அனுமதியை கொடுக்க வேண்டும். ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு அரபிக்கடலில் இதேபோல் சத்திரபதி சிவாஜி சிலையை கடலின் நடுவில் வைக்க கட்டுமானத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு சிஆர்இசட் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி சின்ன தீவு போல அமைக்கப்பட்டு, அங்கு மக்களுக்கு பல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications