மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெளியிட்டார். மாநிலத்தில் கூடுதல் வரி விதிப்போ அல்லது புதிய நலத் திட்டங்களுக்காக புதிய வரி அறிவிப்போ தற்போது இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால் முறையான நிர்வாகச் சீர்திருத்தங்களின் மூலமே நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற முடியும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும் இதுக்குறித்து பேசும் போது "நலத்திட்டங்கள் தவறல்ல... ஆனால் அதற்கான வருவாய் இல்லாமல் அறிவிப்பதுதான் பிரச்சனை!" என தெரிவித்தார். இது தற்போது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mariya Wilson

தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ள நிதியமைச்சர் மரிய வில்சன், கூடுதல் வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் புதிய நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தியதே தற்போதைய நிதிச் சுமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.25,000 கோடி செலவு... எங்கிருந்து வரும் வருவாய்?

வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, மகளிர் உரிமைத் திட்டம், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், உயர்கல்வி உதவித்தொகை திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக மட்டும் 2025-26 நிதியாண்டில் ஆண்டுதோறும் சுமார் ரூ.25,000 கோடி செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த செலவுகளுக்கு இணையாக புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதுவே மாநிலத்தின் நிதி அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி!

வெள்ளை அறிக்கையில் எந்த நலத்திட்டத்தையும் நிறுத்துவது குறித்து நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் வருவாய் இல்லாமல் செலவுகள் அதிகரித்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையே நிதியமைச்சர் விரிவாக விளக்கியுள்ளார்.

ஒரு அரசின் வருமானத்தை விட செலவுகள் தொடர்ந்து உயர்ந்தால், அந்த இடைவெளியை நிரப்ப கடன் வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகும். இதனால் கடன் சுமை அதிகரிப்பதோடு, அந்தக் கடனுக்கான வட்டி செலவுகளும் அரசின் வருவாய் செல்கிறது என எச்சரிக்கிறது.

கடன் அதிகரித்தால் பாதிப்பு எங்கே?

புதிய திட்டங்களுக்கான நிதியை வருவாய் மூலம் ஈட்டாமல் கடன் மூலம் சமாளிப்பது நீண்ட காலத்தில் மாநில நிதிநிலையை பாதிக்கும் என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது.

கடன் அதிகரிப்பதால் வட்டி செலவுகள் உயரும். அதன் விளைவாக சாலை, கல்வி, மருத்துவம், குடிநீர், தொழில் வளர்ச்சி போன்ற உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறையக்கூடும். மேலும் வருவாயை விட செலவு அதிகரிக்கும் போது நிதிப்பற்றாக்குறை உயரும். இது மாநிலத்தின் பொருளாதார நம்பகத்தன்மையையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு முடிந்தும் ஆயத்தம் இல்லையா?

மாநில வருவாய் குறைபாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை மற்றொரு முக்கிய அம்சத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) இழப்பீடு ஒருநாள் நிறுத்தப்படும் என்பது 2017-ம் ஆண்டிலிருந்தே தெரிந்திருந்த போதிலும், அதற்கேற்ப மாற்று வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் போதுமான அளவில் முந்தைய அரசு மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக வரித்துறையில் நிலவும் குறைபாடுகள், முத்திரைக் கட்டண மதிப்பீட்டில் உள்ள இடைவெளிகள், ஆயத்தீர்வை வருவாயின் குறைவு மற்றும் கனிமவளத் துறையில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் ஆகியவை மாநில வருவாயை பாதித்த காரணங்களாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+